பக்கம்:அந்தமான் கைதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

 நட : அவனும் ஒன்றும் சும்மா கொடுத்துவிட மாட்டான். இந்தப் பிரமாத வீட்டுக்காக ஒரு பெண்னுடைய வாழ்க்கையைக் கெடுத்து விடுவதா என்ன? இந்த வீடு போனலும் சரி! அத்துடன் நீயும் போய் விட்டாலும் சரி, அதற்காக நான் கவலைப் படப் போவதில்லை.

முனி : தம்பி! நீங்க என்ன இப்படிக் கோவிச்சிக்கிறீங்க? என்னமோ அவுங்க வயித்தெரிச்சல் தோணினதைச் சொல்றாங்க, எல்லாம் போயி இந்த வீடு ஒன்னு தானே!

நட : ஓய்! உன்னை ஒன்றும் கேட்கவில்லை. இது எங்கள் குடும்ப விஷயம், நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ.

முனி : பாத்தியா! பாத்தியா கொஞ்சங்கூடப் பொறுமையில்லையே! நீ உன் மேலேயே குத்தத்தே வச்சிக்கிட்டு இப்படி சொல்றவங்க கிட்டே எல்லாங் கோவிச்சிக்கலாமா?

நட : என்மேலே என்னைய்யா குற்றம்? குற்றமாம் குற்றம்!

முனி : ஆமாம், நீ ஒரு வேலை வெட்டியைப் பார்த்துக்கிட்டு இருந்தா இந்தக் கடங்காரப்பய, கிட்டே வருவானா?

நட : வேலை கிடைத்தால் நான் வேண்டாமென்றா சொல்லுகிறேன்? அப்படி நான் சோம்பேறியாக இருக்க விரும்பவில்லையே!

முனி : என்னமோப்பா சரீன்னா எனக்குத் தெரிஞ்ச யாருக்கிட்டேயாச்சும் சொல்லிக்கூட ஏதாவது ஏற்பாடு செய்யலாம். ஆன அந்த வேலை யெல்லாமா உனக்குப் பிடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/59&oldid=1029613" இலிருந்து மீள்விக்கப்பட்டது