பக்கம்:அந்தமான் கைதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


நட: அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை. என் குடும்ப நலத்துக்காக நியாயமான எந்த வேலையும் செய்யத் தயார்.

முனி: எனக்குத் தெரிஞ்ச செட்டியார் ஒத்தர் நேத்துக் கூட ஏங்கிட்டே அவரு கடைக்கு ஒரு கணக்கப் பிள்ளை வேணும் இன்னு சொன்னாரு. அடுத்தவாரம் கப்பல்லே தான் ரெங்கோனுக்குப் போறேன்னு சொன்னாரு. ஒரு தரம் போயிட்டு வந்துட்டா, அப்புறங் கேக்க வேண்டாம். ஆனல் தூரந்தொலையா இருக்குமேன்னுதான் தம்பிக்கு யோசனையா இருக்கும்.

நட: அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்படி இருந்தால் கொஞ்சம், தயவுசெய்து அவரிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்களேன்.

காமா: நாளைக்கு நடக்கவேண்டிய காரியத்துக்கு ஒன்னேயுங் காணுமே. அதெ விட்டுட்டு என்னென்னமோ மேலேக்கு நடக்கிறதெப் பத்திப் பேசுறீங்களே.

முனி: அதென்னங்க பிரமாதம். செட்டியாரு நல்ல மனுஷன், அதுலேயும், நான் சொன்னத் தட்டமாட்டாரு மொதல்லே 100, 200 முன் பணமா வாங்கி இப்பக் கட்டி விட்டுப் பாக்கியை மாசா மாசம் கொஞ்சங் கொஞ்சமாகக் கட்றேன்னு சொன்ன சேர்வை கேக்காமேயா போயிடுவான்? அப்படி நான் சொல்லியும் அவன் கேக்கலேன்னா அவன் இந்த ஊருலேருந்து பொளேச்சிடுவானா, என்ன?

காமா: என்னமோப்பா, நீயாவது எங்க விஷயத்திலே இவ்வளவு தூரம் எரக்கங்காட்டி ஒத்தாசை செய்யறேங்கிறியே, நீயும் உன் பிள்ளெகுட்டியும் ஜென்ம ஜென்மத்துக்கும் நல்லா இருக்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/60&oldid=1073444" இலிருந்து மீள்விக்கப்பட்டது