பக்கம்:அந்தமான் கைதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


நட : நீங்க இந்தச் சமயத்திலேயே இந்த உதவியைச் செய்தால் இதை நான் எப்பொழுதும் மறக்க முடியாது.

முனி : அடடே இது என்னங்கப் பிரமாதம். சரி, நான் போய் செட்டியாரைப் பார்த்துக் காரியத்தை முடிச்சிக்கிட்டு விளக்கு வைக்கிறத்துக்குள்ளே வந்திடுறேன். ஆன நானும் பிள்ளெக் குட்டிக்காரன். நமக்கு எங்கேயும் குடுக்கிற மாதிரி ரூபாய்க்கு கால் ரூவா கமிசன் உண்டு. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன...அப்ப...நான் வரட்டுங்களா?

நட : ஆகா! அதெல்லாம் உங்கள் மனம்போல் செய்வோம். நீங்கள் மட்டும் எப்படியாவது காரியத்தை......

முனி : அடாடா இந்த முனியாண்டிக்குச் சொல்லவா வேணும். நான் வர்ரேனுங்க, ம்............ ஏதாவது சில்லரை...

நட : எல்லாம் காரியம் முடியட்டும்; பிறகு......

முனி : மகமாயி...... (போகிறான்)

காட்சி 11.

இடம் : ரோடு
பாத்திரங்கள்: ஜம்பு, முனியாண்டி

[ஜம்புவும் முனியாண்டியும் பேசிக்கொண்டு வருகிறார்கள்]

முனி : அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்.

ஜம்பு : அப்போ நாளைக்குப் பிரயாணம் நிச்சயம் தான்?

முனி : அதுதான் முடிஞ்சு போன விஷயமாச்சே!

ஜம்பு : எப்படி என் யோசனை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/61&oldid=1073443" இலிருந்து மீள்விக்கப்பட்டது