பக்கம்:அந்தமான் கைதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

 பொன் : சீறுவான் சீறுவான்; சீறமாட்டானா? சரி. பாக்கிக் காரியமெல்லாம் எப்படி? என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்?

முனி : அது தானுங்க! அந்தப் பையனே சம்மதிக்க வச்சு, செட்டியையும் சரிப்படுத்தி, ஒருவழியா ஊருக்கு அனுப்பினேன?

பொன் : ஆமாம், அப்புறம்

முனி: அப்புறம் என்னங்க முனியாண்டி சும்மாவா இருந்துடுவான்னு நினைக்கிறீங்க! பையன் ஊருக்குப் போனதிலே இருந்து இந்த ஒரு வாரமா ஒழிஞ்ச நேரமெல்லாம் எனக்கு அங்கேதான் வேலை அப்படி இப்புடீன்னு உங்க பெருமையெல்லாம் அள்ளிவிட்டு அதைச் செய்வாரு இதைச் செய்வாருன்னு சொல்லி பெரியம்மா ஒரு மாதிரி நம்ம வழிக்கு வந்துட்டாங்க. இப்பக்கூட இங்கே வந்ததாகச் சொன்னாங்க.

பொன் : என்ன! உண்மையாகவா? காமாட்சியே இங்கே வருவதாகச் சொல்லிற்ரு? எப்பொழுது எத்தனை மணிக்கு.........

முனி : அதுக்குள்ளே எஜமான் இப்படி அவசரப்பட்றீங்களே! அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். எல்லாந் தானா நடக்கும்; நீங்கபாட்டுக்கு இருங்க.

பொன் : சபாஷ் முனியாண்டி! நீ இவ்வளவு தூரம் செய்வாயென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சரி காமாட்சி வரட்டும். அதெல்லா மிருக்கட்டும். முனியாண்டி! நீ என்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம் லீலா அங்கே இருப்பாளா? சந்தோஷப்படுவாளா. நீ பார்த்தவரையில் என்மேல் அவளுக்குப்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/66&oldid=1030392" இலிருந்து மீள்விக்கப்பட்டது