பக்கம்:அந்தமான் கைதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பேரு சொல்லணுன்னுதான் எனக்கு மட்டத்த ஆசை. அதுக்குத்தான் அந்தப் பயல் முட்டுக் கட்டையா இருந்தானே! நான் என்ன செய்வேன்?

பொன் : ஆமாம், உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு சாக்குச் சொல்ல வழி உண்டு முட்டுக்கட்டையாக இருந்த அவன்தான் இங்கே இல்லையே! இப்பொழுதுதான் ஆகட்டுமென்று சொன்னாலென்ன?

காமா : என்னப்பத்தி என்னண்ணா யோசனை? அவன் இல்லாத போது......

பொன் : பார்த்தாயா முதலில் அவன் முட்டுக்கட்டையாய் இருந்தான் என்றாய். இப்போது அந்த முட்டுக் கட்டை இல்லையே யென்று வருத்தப் படுகிறாய் உம். பேஷ் காமாட்சி ரொம்ப நன்றாயிருக்கிறது உன் பேச்சு, நான் எப்படிப் போனால் உனக்கென்ன?

காமா : சரி, சரி! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இன்னைக்கி அவளையே நேரில் கேட்கிறேன். அவள் சரீன்னு சொல்லிட்டா......

பொன் : இதோ பார் காமாட்சி! நீ என்ன சுத்தக் கர்னாடகமாக இருக்கிறாயே? தனக்கு இன்ன மாப்பிள்ளை தான் வேண்டுமென்று கல்யாணப் பெண் வெட்கத்தை விட்டு வெளியே சொல்லுவாளா எங்கேயாவது? இல்லை எவனாவது ஒரு காலிப்பயலையோ அல்லது அன்னக்காவடியையோதான் கட்டிக் கொள்வேன் என்று சொன்னால் அவள் இஷ்டத்திற்கு விட முடியுமா? நாம் பார்த்துக் கழுத்தை நீட்டு என்று சொன்னால் நீட்டவேண்டிய பெண்ணிடம், யோசனை கேட்கப் போகிறேன் என்கிறாயே! அடே யாரடா அங்கே! (ஒருவன் ஓடி வந்து நிற்கிறான்) காப்பி கொண்டுவா (உள்ளே போகிறான்) முனியாண்டி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/69&oldid=1030409" இலிருந்து மீள்விக்கப்பட்டது