பக்கம்:அந்தமான் கைதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நீயும் வாங்கிக் கொள். அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடு; போதாவிட்டால் சொல்லி அனுப்பு. வேண்டிய பணம் அனுப்புகிறேன். இதோ பார்! இந்தச் சங்கிலி 30 பவுன். இப்பொழுது கடைசியாய் மூன்றாந்தாரமாக வாழவந்தாளே மங்களம், அவளுக்காகச் செய்தது. இதை நீ போட்டுக்கொள். இன்னும் வேண்டியதை சங்கோஜமின்றிக் கேள்.

காமா : எனக்கென்னத்துக்கண்ணா இதெல்லாம்.

பொன் : அடடே பயித்தியம், சும்மா போட்டுக்கொள்; நீ ஒரு திவான் பகதூருடைய மாமியாரல்லவா? சும்மா போட்டுக்கொள்.

காமா : ஏண்ணா? இதெல்லாம் இருக்கட்டும். அந்த வீடு...

பொன் : எனக்கென்ன அவ்வளவு தூரம் தெரியாதென்றா நினைத்துவிட்டாய்... (ஒரு பத்திரத்தைக் காட்டி) இதோ பார் சேர்வைக்குப் பூராத்தொகையும் செலுத்திக் கணக்கைத் தீர்த்துப் பத்திரத்தையும் திருப்பி வாங்கி வைத்திருக்கிறேன். இது மட்டுமா? கீழக் குறிச்சி கிராமப் பட்டாவை அப்படியே லீலா பேருக்கே மாற்றிவிட ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறேன்.

காமா : உம்...இதை யெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காம அந்தப் பையன் ஒங்களே எவ்வளவு தூரம் பேசிப்புட்டான்.

பொன் : அவன் போகிறான் மடையன், சின்னப் பையன் தானே? என்னமோ தெரியாமல் பேசிவிட்டான். அதற்காக நான் உங்களே வெறுத்துவிட முடியுமா என்ன? (வேலையாள் வருகிறான்)

வேலை ஆள் : சாப்பாடு தயாராகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/71&oldid=1069590" இலிருந்து மீள்விக்கப்பட்டது