பக்கம்:அந்தமான் கைதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


பொன் : சரி, இலை போடு. இதோ வருகிறோம். (வேலை யாள் போகிறான்) சரி காமாட்சி எழுந்திரு, முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாம்.

காமா : இல்லை யண்ணா! லீலா, வீட்டில் தனியா இருக்கா, நான் உடனே திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லி விட்டு வந்தேன். நீங்க சாப்பிடுங்க, நான் வீட்டுக்குப் போயிட்டு நாளைக்குக் காலையில் வர்ரேன்.

பொன் : நன்யிறாருக்கிறது, உன்னிடம் இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. சாயங்காலம் கார் அனுப்புகிறேன்; அதில் போகலாம். லீலா சின்னக் குழந்தையா என்ன? எழுந்திரு. (இருவரும் சாப்பிடப் போகிறார்கள்.)


காட்சி 14.

இடம் : பூந்தோட்டம். காலம் : மாலை

பாத்திரங்கள் : லீலா, பாலசுந்தரம்.

[லீலாவும், பாலசுந்தரமும் கிணற்றங்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

பாலு : லீலா இப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் உடம்பு என்ன ஆகும்? உன் அண்ணன் மட்டும் தான் அதிசயமாக ரெங்கோனுக்குப் போயிருக்கிறார்? எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜனங்கள் தாய் நாட்டைத் துறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வெளி நாடுகளுக்குச் சென்று எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/72&oldid=1073447" இலிருந்து மீள்விக்கப்பட்டது