பக்கம்:அந்தமான் கைதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

விட்டாங்க. கழுத்திலே கயத்தைப் போடுறதுக்கு நாள் பாத்துட்டா கல்யாணம் முடிஞ்சமாதிரி தான். உம், புறப்படுங்க.

ஜம்பு : சரி. நான் முன்னாடிப் போறேன்; நீ போயி நம்ம பாலகிருஷ்ண சாஸ்திரியேக் கையோட இழுத்துக் கிட்டுவா.

பையன்: இதோ!-

(போகிறார்கள்)

காட்சி 16.

இடம் : நடராஜன் வீடு

பாத்திரங்கள் : லீலா காமாட்சி.

[லீலா கட்டிலில் அமர்ந்து கைக்குட்டை பின்னியபடி பாடிக் கொண்டிருக்கிருள். காமாட்சி வருகிறாள். ஒரு ஆள் தலையில் இரண்டு மூன்று மூட்டைகளையும் பெட்டியையும் கொண்டு வந்து இறக்கிவைக்கிறான்.]

லீலா : இது என்ன அம்மா மூட்டை முடிச்சுகளெல்லாம் பலமாயிருக்கிறதே! இவை யெல்லாம் என்ன?

காமா : எல்லாம் ஒனக்காகத்தான். இந்தா இதை வாங்கி அப்படிவை.

(எல்லாவற்றையும் வாங்கி வைக்கிறாள்)

வேலை ஆள் : நான் போயிட்டு வரட்டுங்களா அம்மா?

காமா : மகராசனாய் போயிட்டு வாப்பா. போயிட்டுவா.

(போகிறான்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/78&oldid=1073450" இலிருந்து மீள்விக்கப்பட்டது