பக்கம்:அந்தமான் கைதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

 லீலா: இதென்னம்மா இந்தக் கூடையில்?

காமா : அதுவா பழங்கள். ஆரஞ்சி, மாதளை, சாத்துக் கட்டி, மலைப்பழம் எல்லாம் நிறைய இருக்கு; எடுத்துக்கோ. வேண்டியதை எடுத்துச் சாப்பிடு. இந்தா இதெல்லாம் பலகாரங்கள். இதையும் எடுத்துக்கோ. இந்தா பாரு இதெல்லாம் பட்டுச் சேலையும் ரவிக்கையுந்தான்; அவ்வளவும் நிறைய ஜரிகை போட்டது. எல்லாம் ஒனக்காகத்தான் வாங்கிக்கிட்டு வந்தேன். மொதல்லே அந்தப் பழைய சேலையை அவுத்தெரிஞ்சிட்டு இதிலே நல்லதா ஒனக்குப் புடிச்ச சேலையாப் பார்த்து எடுத்துக் கட்டிக்கோ (குதூகலத்துடன் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுக்கொண்டு லீலா ஆச்சரியத்தோடு சொல்லுகிறாள்.)

லீலா : ஏம்மா! இதெல்லாம் ஏது? அவ்வளவும் புதிதாயிருக்கிறதே!

காமா : ஏண்டியம்மா! உன் அதிஷ்டத்துக்கு யார் பொறந்திருக்கா. எல்லாம் நல்ல காலத்துக்குத் தான் வரும்! இதைப் பாரு! (நகைப் பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டுகிறாள்) காசுமாலை! இது கழுத்துச் சங்கிலி, கம்மல், வளவி இதெல்லாம் பாத்தியா? இந்தக் கல்லு நகையெல்லாம் அவ்வளவும் வைரமாம்! இதெல்லாம் போட்டுக்கிட்டு இந்தச் சேலை ரவிக்கையையும் போட்டுக்கிட்டா உன் அழகுக்கு எவ்வளவு நல்லா இருக்கும்:

லீலா : இவையெல்லாம் ஏதம்மா என்றால் அதற்குப் பதில் சொல்லாமல் நீ பாட்டுக்கு வர்ணித்துக் கொண்டே, இருக்கிறாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/79&oldid=1069685" இலிருந்து மீள்விக்கப்பட்டது