பக்கம்:அந்தமான் கைதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காட்சி 17.

இடம் : வீதி.

காலம் : மாலை

பாத்திரங்கள் : ஜம்பு, பாலசுந்தரம்.

[ஜம்பு கையில் கலியாணப் பத்திரிகையோடு வருகிறான்; எதிரே வேகமாக பாலு வருகிறான்.]

ஜம்பு : ஹலோ மிஸ்டர் பாலு குட் ஈவினிங் குட் ஈவினிங் ஊம்......எங்கே இந்நேரத்திலே இந்தப் பக்கம். இவ்வளவு அவசரமா......

பாலு : அவசரம் ஒன்றுமில்லை; ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும், அதற்காகத்தான் .... இப்படி......

ஜம்பு : சரி, இப்பொழுது உன்னைச் சந்தித்ததும் ஒரு வகைக்கு நன்மைதான். இல்லை என்றாலும் நானே உன் வீட்டுக்கு வரவேண்டு மென்றுதான் இருந்தேன்.

பாலு : அப்படி என்ன முக்யமான காரியம்?

ஜம்பு : நம்ம திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை இருக்கிறாரல்லவா? அவருக்கு நாளைக்குக் கல்யாணம். அதற்கு இன்விட்டேஷன் கொடுக்கத்தான் வர வேண்டுமென்று இருந்தேன்.

பாலு : அவர் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லையே!

ஜம்பு : நான் இருக்கும்போது அவர் பரிச்சயமில்லா விட்டால் என்ன? எல்லாம் நம்ம தர்பார்தான் (ஒரு பத்திரிகையை எடுத்து அட்ரஸ் எழுதிக்கொடுக்கிறான்) இந்தா அவசியம் வந்துவிடவேண்டும். நம்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/83&oldid=1069715" இலிருந்து மீள்விக்கப்பட்டது