பக்கம்:அந்தமான் கைதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 காட்சி 19.


இடம் : வீதி

காலம் : காலை

பாத்திரங்கள்: முனியாண்டி, வேலையாள்.

[முனியாண்டி பொடியை உறிஞ்சிக்கொண்டே வருகிறான். எதிரே திவான்பகதூரின் வேலையாள் வேகமாக வருகிறான்.]

முனி : மகமாயி, அடே தம்பி, எங்கேப்பா இவ்வளவு அவசரமாப்போரே பொண்ணழைக்க கார் போயிடுச்சா?

வேலை ஆள் : பொண்ணழைக்கப் போரதுக்குத்தான் பொறப்புட்டாங்க, காரு மக்கார்ப்பண்ணுது. இப்பத்தான் எல்லாருமாச் சேர்ந்து காரைத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.

முனி : அடடே நேரமாச்சே, அடெ ரெண்டு மாட்டெக் கட்டியாச்சும் இழுத்துக்கிட்டுப் போகச்சொல்றது தானேப்பா ம்....... எஜமான் என்ன செய்யுறாரு?

வேலையாள் : எஜமான் சிங்காரம் பண்ணிக்கிட்டிருக்காரு. உங்களெத்தாங் காணோம்னு சத்தம் போட்டுகிட்டிருந்தாரு சீக்கிரம் போங்க........ ம்........ பூசாரி ஐயா! இந்த நரைமுடி கருக்குங் தைலம் எங்கே கிடைக்கும்?

முனி : யாருக்கு, எஜமானுக்கா?

வேலையாள் : பின்னே எனக்கா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/89&oldid=1070803" இலிருந்து மீள்விக்கப்பட்டது