பக்கம்:அந்தமான் கைதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

பிடித்துக் கொள்ளுகிறாள். இந்தக் கூச்சலைக்கேட்டு வெளியில் பெண் அழைக்க வந்திருந்த யாவரும் ஓடிவந்து கூடி விடுகிறார்கள்.)

கூட்டத்தில் ஒருவர் : இதென்ன வேடிக்கை! என்ன நடந்தது? கார் காத்துக்கிட்டிருக்கு இன்னும் சிங்காரிக்கலையா?

காமா : (தலையில் மட மடவென்று அடித்துக்கொண்டு) இது என் தலைவிதி தலைவிதி தலைவிதி இவ்வளவு ஏற்பாடும் ஆனபிறகு பெண்ணுக்கு இஷ்டமில்லையாம்! இந்த வயிற்றெரிச்சலை நான் யாரிடத்தில் சொல்லி அழுவது? (முகத்தில் துணியை வைத்துக் கொண்டு அழுகிறாள்.)

ஒரு பெண் : (லீலாவிடம்) ஏம்மா இஷ்டமில்லேன்னா முன்னாலேயே சொல்லியிருக்கப்படாதா?

மற்றொரு பெண் : பாவம், சின்னப் பொண்ணு, மனசு கேக்கவாண்டாமா?

கிழவி : தாயார் சொல்றதைக் கேளம்மா. பெத்த தாய் ஒனக்குக் கெடுதல் பண்ண நினைப்பாளா? அவுங்க அவுங்களுக்குக் குடுத்து வச்சதுதானே கெடைக்கும். கோட்டையிலே பொறந்தாலும் போட்ட புள்ளி தவறுமா?

பெரியவர் : உம், உம், சீக்கிரம் புடவையை உடுத்தி அழைச்சிக்கிட்டு வாங்க. கொழந்தப் பொண்ணு. அதுக்கிட்டே எதமாச் சொல்லாமே மொரட்டுத் தனம் பண்ணின சரிப்படுமா? இந்தா! பங்கஜம், தலையை வாரிப் பொட்டுவச்சு உம். ம். ஆகட்டும்...

பங்கஜம் : சீப்பு எங்கேம்மா? வாம்மா - வா. நல்லா படிச்சவளாச்சே நீ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/95&oldid=1072031" இலிருந்து மீள்விக்கப்பட்டது