பக்கம்:அந்தமான் கைதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

 ஒரு பெண்: அதனாலேதானே இவ்வளவு கெடுதலும் வந்தது.

பங்கஜம் : ஏம்மா, நீ சும்மா இருக்கமாட்டே? கிழவி சொந்த மாமா; ஊருக்கே பெரியவரு; அறுபது வயசானாலும் ஆம்பிளைக்கு என்ன? ராஜாங்கமா கார்லே போக வர, நகை நட்டுப்போட,....... ம், ம். பூவை வையடி.......ம். சரி புறப்படும்மா. (காமாட்சியிடம்) ம், ம். காமாட்சி எழுந்திரும்மா. நீ வேறே சின்னப் பிள்ளையாட்டம் அழுதுக்கிட்டு, ம், ம், வா. வா.

(ஆளுக்கொரு பக்கமாய்ப் பேசுவதைக்கண்டு லீலாவின் உடல் குன்றிவிடுகிறது. உணர்ச்சியற்ற பதுமை போல் போகிறாள்.)


காட்சி 22.

இடம் : திருமண மண்டபம்.

காலம் : காலை

(புரோகிதர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேளவாத்தியம் முழங்குகிறது சிலர் வந்தவர்களை வரவேற்று, சந்தனம் தாம்பூலம் கொடுக்கின்றார்கள். ஐயர் சொற்படி பெண்ணும் மாப்பிள்ளையும் அரசாணியைச் சுற்றி வருகிறார்கள். பெண் மயங்கிக் கீழே விழுகிறாள், சிலர் தண்ணீர் தண்ணீர் என்றும், சிலர் தூக்குங்கள் தூக்குங்கள் என்றும் பல விதமாகப் பேசிக் கொள்ளுகிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்த ஜம்பு, பொன்னம்பலம் பிள்ளையையும் புரோகிதரையும் இடித்து ஜாடை காண்பித்துக் கழுத்தில் தாலியைக் கட்டச் செய்கிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/96&oldid=1073511" இலிருந்து மீள்விக்கப்பட்டது