பக்கம்:அந்தமான் கைதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

 பொன் : (திவான்பகதூர் ஆடம்பரமான ஆடை ஆபரணங்ளுடன் பிரவேசிக்கிறார்) ஆஹா, இன்று தான் நான் ஜென்மம் எடுத்ததின் பயனை அடையப்போகிறேன். இன்று தான் நான் திவான்பகதூர். அடே நடராஜா. அன்று என்னடா சொன்னாய்? இந்த உடலில் உயிர் இருக்கும் வரை நீர் லீலாவை மணப்பது முடியாது! (பேரொலிச் சிரிப்பு) முடியாதென்பது யாருக்கடா? உன்னைப்போன்ற கையாலாகாத, விதியில்லாத, கதியில்லாத பிச்சைக்கார நாய்களுக்கல்லவா? எனக்கா? (மறுபடியும் சிரிப்பு) என் இன்பக் கிளி எனக்காகக் காத்திருப்பாள். மதுரத் தேனைப் பருகிக் காம சுகானுபவக் களிபேருவகையடைய இதோ போகிறேன். (மூக்குக் கண்ணாடி, ஆடை அணிகள் எல்லாம் சரி செய்துகொண்டு அடிமேல் அடி வைத்து ராஜ நடை நடந்து, லீலாவை நெருங்கி, அவள் அலங்கோலமாகப் படுத்திருப்பதைக் கண்டு, திடுக்கிட்டு ஓடி அருகில் அமர்ந்து) லீலா! லீலா! இதோ பார்! என்னைப் பாரேன்! ஏன் இப்படிப் படுத்திருக்கிறாய்? இங்கு யாராவது உன்னை எதுவும் சொன்னார்களா? அல்லது...... உடம்புக்கு ஏதாவது (மெள்ளத் தொட்டுப் புரட்ட எத்தனித்தபடி) இப்படித் திரும்பி என்னைப் பாரேன்! நான் கூப்பிடுவது உனக்குத் தெரியவில்லை?

(லீலா, பற்களை நற நறவென்று கடித்துக்கொண்டு கண்களை மிரள மிரள விழித்துப் பயங்கரமான சப்தத்துடன் கழுத்தைப் பிடித்து நெரிக்கப் போகிறாள். திவான் பகதூர் இதைக் கண்டு பயப்படுகிறார்.)

லீலா : டேய்...... ஊம்.....என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்? நான் இருக்கும் இடத்தில் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/99&oldid=1072144" இலிருந்து மீள்விக்கப்பட்டது