பக்கம்:அந்தித் தாமரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

  ஆனால் அந்தப் புயல்...?
  பூ மனசைப் பொங்குமாங் கடலாகச் செய்து விட்ட புயல் அது; பெண் மனம் கொண்ட வைராக்கி யத்தின் விளைவில் புறப்பட்ட பயங்கரப் புயல் அது; கண்ணீர் ஒன்றை மட்டுமே தோழியாக வாய்க்கப் பெற்றவளாக அவளே ஆக்கிவிட்ட புயல் அது !
    *        *      ‌‌*‌
 'அத்தானுக்குக் கல்யாணப் பரிசாக ஜூலா அளித்த பாவை விளக்கை, தன் உரிமைப் பரிசாக என் மகளுக்கு - தன் மகளுக்கு 'அவர்' திரும்பக் கொடுத் திருக்கிறார், எதிர்பாராத இந்தச் சந்தர்ப்பம்கூடத் தெய்வச் செயல் என்றுதான் அர்த்தமா? தெய்வமே, நீ எங்கிருக்கிறாய்?...’
 ருக்மிணியின் விழிகள் பன்னிரண்டு கண்ணீர் முத்துகளைச் சிந்தின. அவற்றிற்கு என்ன தான் மாயமோ? அந்த ஜில்லா கலெக்டர், தாசில்தார் தண்ட பாணியாகத் தோற்றம் தந்தார்.
 தண்டபாணியைத் தன் பதியாகக் கொண்ட ருக் மிணிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. கண் நிறைந்த கணவன்; கை கிறைந்த பொன்; எதிர் காலத்தில் பதவியை உயர்த்திக்கொடுக்கக் கூடிய உத்தியோகம். புன்னகையும் புது நிலவுமாக நாட்கள் ஓடின. அப் போதுதான் கேள்வி முறையின்றி அவளுடைய மனச் சாளரத்தினூடே தொப்பென்று குதித்து விட்டாள் அந்தப் பெண். ஜூலா என்பது பெயர். அதே ஆபீ ஸில் டைப்பிஸ்ட் அவள். அத்துடன் தண்டபாணியின் கல்லூரிச் சிநேகிதி என்ற ஒட்டுறவு. ஜூலாவும் தண்ட பாணியும் ஆதியில் தம்பதிகளாக எண்ணினராம். பெற்-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/10&oldid=1387023" இலிருந்து மீள்விக்கப்பட்டது