பக்கம்:அந்தித் தாமரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iC3

பையன் மருந்துப் பெட்டியை சைக்கிள் காரியரில் இணைத்துக் கட்டிவிட்டுத் திரும்பினுன் சைக்கிளும் கையுமாக டாக்டர் புறப்பட்டார். ஆஸ்பத்திரிக் காபி பவுண்டைத் தாண்டிச் சென்று சந்துமுனையில் அவர் திரும்பினர். சந்துமுனை அல்லவா? மணி அடித்தார், எதிரே மணி சலசலக்க வந்த வில் வண்டி அவரைக் கண்டதும் டக்கென்று கின்றது. அடுத்தவினடி தன்னை அப்படியே மறித்து விடுபவனைப் போல ஒருவன் வியர்க்க விறுவிறுக்க வந்து கிற்பதைக் கண்டதும். சேகரன் சைக்கிளை விட்டுக் கீழிறங்கினர்.

“டாக்டர் எசமான், காட்டு வைத்தியர் ஆதிமூலம் ஐயா மகளுக்கு மூணு காளா விடாத சுரமுங்க. ஐயாவே உங்களைக் கையோட வண்டியிலே கூட்டி யாரச் சொன்னங்க.’ -

“என்ன, செம்பவளத்திற்கா ஜூரம்? சரி புறப்படு. கான் சைக் கிளில் நொடியில் போய்ச் சேருகிறேன்’ என்று சொல்லிவிட்டு டாக்டர் சேகரன் பெடலே அழுத்தினர். மனம் சிந்திக்கத் தொடங்கியது.

அப்பொழுது டாக்டர் சேகரன் கிராமத்தில் பணி யாற்றி வந்த புதிது. வடிவேலு கிராமத்துக் குடியான வன். அவன் குழந்தைக்கு ஜூரம் என்று ஓடி வந்தான். சேகரன் சென்று குழந்தையைப் பரிசோதித்து மருந்து கள் கொடுத்தார். இஞ்செக்ஷன் ஒன்று போட்டு, ‘பத்தியத்தையும் கூறிப் புறப்பட்டார். ஆனால்,அந்தக் குழந்தை இரவு கெடு நேரமாகியுங்கூடக் கண் திறக்க வில்லை; பெற்றவர்கள் துடித்தனர். பச்சைப் புள்ளைக்கு யாராச்சும் ஊசி போடுவாங்களா? காம் முன் பின் கண்டறியாத புது வளக்கமாயில்லே இது இருக்குது? காட்டு வைத்தியர் ஆதிமூலம் ஐயா கிட்டே காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/105&oldid=619530" இலிருந்து மீள்விக்கப்பட்டது