பக்கம்:அந்தித் தாமரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i07

சிலம்பு. எங்களுடைய பரம்பரைப் பொக்கிஷம். இதை உங்கள் பெண்ணுக்கு நினைவு வந்ததும் கையில் கொடுத்து, வணங்கச் செய்யுங்கள் கண்ணகித் தெய்வம் கருணை காட்டும்...... என்றார்,

அந்தக் கண்ணகிச் சிலம்பை ஆதிமூலம் அப்படி விழுங்கிவிடுவது மாதிரியாக எவ்வளவு கேரம்தான் பார்த் துத் தீர்த்தாரோ? -

“டாக்டர் ஐயா, அதிசயமாக இருக்கிறதே, இது என் வீட்டில் உள்ளதாயிற்றே. இந்தச் சிலம்பைக் காணுேமென்றுதானே சற்று முன் எனக்கு உயிரே

போய்விட்டது...... இது எப்படி உங்கள் கையில் வந்தது? இதோ பாருங்கள் என் விலாசம் பொறித் திருக்கிறது...... ’ என்று கூறினர் ஆதிமூலம்.

டாக்டர் சேகரன் வியப்பில் விரித்த விழிகளுடன் அந்தச் சிலம்பையும் அதிலிருந்த விலாசத்தையும் மாறி மாறிப் பார்த்த பின்னர், மறுபடியும் அவர் தன் மருந்துப் பையைத் தடவினர். என்ன ஆச்சரியம் அவர் கையில் மற்றெரு கண்ணகிச் சிலம்பு மின்னிப் பளிச்சிட்டது.

‘வைத்தியர் ஐயா, இப்போதுதான் எனக்கும் உயிர் வந்தது. இதுதான் எங்கள் குடும்பத்துக்குரிய கண்ணகிச் சிலம்பு. என் தந்தையாரின் பெயர் இதில் எழுதப்பட்டிருக்கிறது பாருங்கள். ஆனால், உங்களு டைய சிலம்பு எப்படி என் பைக்கு வந்தது என்பதுதான் தெப்பிடு வித்தையாகத் தோன்றுகிறது...... ’ என்று மூச்சு விடாமல் சேகரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆதிமூலம் ஓடிவந்து அப்படியே அவரை அன் போடு தழுவிக் கொண்டார். - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/109&oldid=619538" இலிருந்து மீள்விக்கப்பட்டது