பக்கம்:அந்தித் தாமரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

றோரின் கட்டுப்பாடு குறுக்கிடவே, தண்டபாணி ருக்மிணியைக் கைத்தலம் பற்றினானாம். தங்கத்தாலான பாவைவிளக்கு பரிசாக வந்தது ஜூலாவின் சூழலிலிருந்து. அதுவே தண்டபாணிக்குப் போதை ஊட்டியது. அங்கு ஜூலா காணப்பட்டாள். முதல் பூ மடலவிழ வேளை பார்த்திருக்கும் நல்ல சேதியைச் சொல்ல ஓடோடி வந்தாள் ருக்மிணி.

ருக்மிணி.

என்னை மறந்து விடு, மாதம் தவறாமல் உனக்குச் செலவுக்குப் பணம் கிடைக்கும்.

தண்டபாணி.”

ஜூலாவின் போதைக் கண் வீச்சில் தன் கணவன் அடக்கமான கதையைச் சொன்னது மேற்படி கடிதம்.

குழந்தை சூடாமணி மாத்திரம் இல்லை யென்றால், இந்நேரம் ருக்மிணி மாண்ட இடம் புல் மண்டிப் போயிருக்கும்.

கணவனிடமிருந்து பணம் வந்தது; திருப்பி விட்டாள் மனைவி. அவளுடைய சங்கீத ஞானம் அவளுக்கும் குழந்தைக்கும் படி அளந்தது.

நாட்கள் ஓடின.

காலம் குழந்தைக்குப் பேசக் கற்றுக் கொடுத்தது! ஒரு நாள் சூடாமணி, “அம்மா” என்று கூப்பாடு போட்ட வண்ணம் ஓடிவந்து, “அம்மா, எங்கே அம்மா நம்ப அப்பாவை மட்டும் இத்தனை நாளாக் காணல்லே...?” என்று திக்கித் திக்கிக் கேட்டாள்.

இதய ஒட்டத்தை யாரோ நிறுத்திவிட்ட மாதிரி உணரலானாள் ருக்மிணி. பேசத் தெரியவில்லை ; ஆன ஆனாலும் பேசினாள் : “மணி, உன் அப்பா வந்திடுவார், கண்ணே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/11&oldid=1459986" இலிருந்து மீள்விக்கப்பட்டது