பக்கம்:அந்தித் தாமரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ið8

சேகரன், நீங்கள் ராமகாதனின் மகன ? அவர் என் உயிருக்குயிரான நண்பரல்லவா? இந்தச் சிலம்பும் அதிலிருந்த அவர் திருகாமமும் என்னேக் கண் திறக்கச் செய்துவிட்டன. அந்த காளில் நானும் அவரும்தான் பர்மாவில் ஒன்றாகக் கொஞ்ச நாள் மரக்கடை கடத்தி னுேம், அப்போது நான் அவருக்கு என் அன்பின் அடையாளமாகக் கொடுத்த எங்களுடைய மற்றாெரு சிலம்பு இது. அக்கரைத் தண்ணீர் பிடிக்கவில்லை; நான் பிரிந்து விட்டேன். உங்கள் அப்பாவைத்தான் பிறகு காணக் கொடுத்து வைக்கவில்லை. இன்று அவர் புதல்வனை-உங்களைக் காணும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்ததே, அதுவே போதும். இதுவும் தெய்வத்தின் நல்ல முடிவுதான். உங்களைப் பற்றி கான் இதுவரையில் கொண்டிருந்த தவருண எண்ணத் துக்கு இப்பொழுது நான் மிக மிக வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். அத்துடன் ஒரு வேண்டுகோளைத் தங்களிடம் நான் யாசிக்கிறேன். டாக்டர்ஸ்ார், இல்லறக் கல்லூரியில் கிம்மதியான குடித்தன வாழ்க்கையும் கிராம மக்களிடையே அன்புப் போதனையும்தான் என் செம்பவளத்தின் எதிர் காலக் கனவு இவற்றுக் கெல்லாம் என் ஒரே மகள் செம்பவளம் கண் நிறைந்த உங்கள் தயவை-துணையைத்தான் எதிர் பார்த்திருக் கிருள்.....’ என்றர் ஆதிமுலம் ஆனந்த பரவசக் குரலில். . .

மலர் விழிகளைத் திறந்தவாறு சுய நினைவடைந்த செம்பவளம் நடந்த கதை அனைத்தையும் கேட்டுக்’ கொண்டிருந்திருக்க வேண்டும், டாக்டர் சேகரனே விழுங்கி விடுவது போலப் பார்த்த அவளது பனிப் பார்வையில், என் கனவு பலித்தது!’ என்ற அவளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/110&oldid=619541" இலிருந்து மீள்விக்கப்பட்டது