பக்கம்:அந்தித் தாமரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? #2

‘கண்ணேத் துடைச்சுக்க, செவ்வந்தி, கடராசர் சாமி உனக்கு கல்ல வழி காட்டாமல் இருக்கவே மாட் டார்; என் பேச்சை நம்பு; கம்பினவங்களுக்கு நடராசர் தான் சகலமும்!” என்று ஆறுதல் மொழி உதிர்த்தார் வினைதீர்த்தான். பூவரச இலையைக் கிள்ளி வந்து, செக் துரப் பொட்டலத்தைப் பிரித்து அதைத் தேனில் குழைத்து அவளிடம் நீட்டினர். செக்கச் சிவந்திருந்த பெண் முகத்திலே வேதனையின் கருமை நிழல் காட்டி யதை அவர் உணராமல் இருப்பாரோ? ஆல்ை, செவ் வந்தியின் வினைதீர்க்கும் வினைதீர்த்தாகை அமையும் கிலேயில் அவரைத் தெய்வம் அமைக்கவில்லையே!

அப்பொழுது வேதநாயகம் அங்கு வந்து நின்றன்; ‘செவ்வந்தி!’ என்று குரல் கொடுத்தான். உள்ளே கடந்தான்.

அனற் காற்றுப் படிந்த ரோஜாப்பூ மாதிரி செவ் வந்திப்பூ விளங்கியது.

‘ஐயா, இந்தாங்க இருபது ருபாய் இருக்குது. அப்பா கொடுத்ததோடு இதுவும் செலவுக்கு இருக் கட்டும். அந்தக் காலத்திலே செவ்வந்தியின் அப்பா உங்களுக்குச் செஞ்ச கன்மையை மனசிலே மறக்காம வச்சுக்கிட்டு உங்க பொண்ணுட்டம் செவ்வந்தியை வளர்த்து வாருங்க, தெய்வம் உங்களுக்குக் கட்டாயம் இனிமேல் கல்லது செய்யும்!” என்றான் வேதகாயகம்.

வினைதீர்த்தானின் விழிகளில் புனல் வாழ்ந்து கெட்ட வரலாறு புனலிடைக் கரைந்தது !

புகைச்சல்-இருமல் செவ்வந்திக்கு உரித்தானதாக அப்போதைக்குக் குரல் கொடுத்தது. அவள் எழுந்து தலையணையில் முழங்கையைப் பதித்துச் சாய்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/114&oldid=619549" இலிருந்து மீள்விக்கப்பட்டது