பக்கம்:அந்தித் தாமரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


ஆனல், அந்த வைர அட்டிகை எங்கே?

சோமையா வாய்விட்டுப் புலம்பினர். என்மகன் வேதகாயகத்துக்குக்கூட வைர அட்டிகையின் துப்புத் தெரியாதே?...நான் செய்த தப்பான செயல் அம்பல மாகிவிடுமோ?... காணுமற் போன அட்டிகையைப் பற்றிப் புகார் செய்யக்கூட இயலாதே?...என் மானத் தைக் காப்பாற்று!...”

மஞ்சள் தடவப் பெற்றிருந்த ஜாதகக் குறிப்பை மீண்டும் சோமையா பார்த்தார். மணமகனக வேதநாய, கமும், மணமகளாக அமிர்தமும் காட்சியளித்தனர்.

இருளின் வருகைக்காக காத்திருந்தார் சோமையா. “பணக்காரங்களான நீங்க எங்க செவ்வந்தியை மருமகப் பொண்கை ஏத்துக்கிட ஒப்பமாட்டீங்க. ஆ,ைஉங்க பொறுப்பிலே கல்ல மாப்பிள்ளையாப் பார்த் துச் செவ்வந்தியை ஒப்படைக்கவாகிலும் பாடுபடுங்க!” என்று முன் தினம் சொன்ன வினைதீர்த்தானின்சொற்கள் அவர் கெஞ்சைத் தொட்டன. செவ்வந்தியின் திருமணத் தைத் தன் செலவில் கடத்தி விடுவதாக அவர் வாக்குக் கொடுத்தார்; செவ்வந்தியிடம் சென்று வைர அட்டி கையின் விஷயத்தை விளக்கி அதற்கு ஈடான பணத் தைக் கொடுத்து அந்நிகழ்ச்சியைக் கடைசிவரை ரகசிய மாக வைக்கும்படி வேண்டிக் கொள்ளவும் திட்ட மிட்டார். - - -

இரவு வந்தது. செவ்வந்தியைக் கண்டு வரப் புறப் பட்டார் சோமையா. இடுப்பு மடியில் ஆயிரம் ருபாய் ரொக்கம் இருந்தது; நெஞ்சில் அம்பலவாணன் இருந்: தான்; மானம் இதயத்தின் அரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

அந்தி-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/119&oldid=1273111" இலிருந்து மீள்விக்கப்பட்டது