பக்கம்:அந்தித் தாமரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:10

 ஜோடிக் குழந்தைகள் தங்கள் தகப்பன்மார்கள் தந்த பரிசுகளைக் கொண்டு வந்து காட்டின சூடாவிடம். சூடாவின் குழந்தை உள்ளம் குமுறியிருக்க வேண்டும்.

  பின்னும் சில மாதங்கள் கழித்து ஒருநாள், "அம்மா, எப்போ என் அப்பா வருவாராம்?...” என்று கேட்டாள் சூடா.
 வேறு வழியில்லை. தாய் கடந்த கதையை மகளி டம் விவரித்தாள்.
 "அம்மா, அந்த அப்பாவின்-ஊஹூம்,நம்ப வைரி யின் படம் ஏதாச்சும் இருந்தாக் கொடு. ஒரு நாள் இல் லாட்டி ஒருநாள் அவனே நேரிலே கண்டால் நல்ல பாடம் சொல்லித் தருவேன்..." என்று சபதம் செய்தாள் குழந்தை சூடாமணி. 

 இதற்குப் பயந்து, தன் புருஷனுடைய போட்டோ வைக்கூட ஒளித்து வைத்து விட்டாள் ருக்மிணி.
 "சூடா, உன் அப்பா எனக்காக இல்லாவிட்டாலும் உனக்காக வேனும் என்றாவது ஒருநாள் கட்டாயம் கம் வீடு தேடி வருவார். கண்ணே!’ என்ற தாயின் சொற் கள் அந்தக் குழந்தை உள்ளத்திலே எந்தவித மாற்றத் தையும் விளைவித்தால்தானே...?
 "பிரிய ருக்மிணி, 

உன் வைராக்கியம் என்னைக் கிறுக்காக்கி விடும் போலிருக்கிறது. பணத்தைக் கூடப் பெற்றுக் கொள்ளக் கூடாதா? என் தவறை மன்னித்துப் பதில் போடு. உன்னையும் குழந்தையையும் அழைத்துப் போக வருகிறேன்

                தண்டபாணி"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/12&oldid=1387120" இலிருந்து மீள்விக்கப்பட்டது