பக்கம்:அந்தித் தாமரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

அது சமயம் செவ்வந்தி எதிர்ப்பட்டாள். "மாமா! இங்தாங்க வைர அட்டிகை!” ‘ என்றாள் அவள்.

“அம்மா செவ்வந்தி! முதலிலே என்னை மன்னிச்சிப்பிடு அம்மா!...இந்த வைர அட்டிகை உன் சொத்து. நீயே வைத்துக்கொள்!... ...”

“ஊஹும். இது எனக்கு வேண்டாம். இது உங்களுக்குத்தான் சேர வேணும். இவ்வளவு நாளும் நான் சாப்பிட்டுக்கிட்டு வாரது நீங்க அளந்தபடி தானுங்களே?...” என்று செவ்வந்தி விம்மினாள்.

வெளியிலிருந்து வினைதீர்த்தான் வந்தார்; வள்ளியம்மை உள்ளேயிருந்து வந்தாள். -

“சரி! முதலிலே உங்க மருமகப் பொண்ணை உள்ளே கூட்டிக்கிட்டு வந்து ஆசீர்வாதம் செஞ்சு, வைர அட்டிகையை வாங்கிச் சாமி முன்னால் வையுங்க. நான் அதுக்குப் போட்டு விடுகிறேன். நான்தான் தம்பிக்குக் கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கிறதுக்குச் சம்மதம் கொடுத்தேன். நம்ப மானத்தைக் காப்பாத்தி, நம்பளை வாழ வச்சிருக்கிறதே நம்ப மருமகப் பொண்ணு செவ்வந்தியாக்கும்!” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் வள்ளியம்மை.

வைர அட்டிகையின் ஒளியிலே செவ்வந்தியின் கூந்தலில் சூட்டப்பட்டிருந்த செவ்வந்திந் பூச்சரத்தின் சுகந்தம் இழை பாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/121&oldid=1305827" இலிருந்து மீள்விக்கப்பட்டது