பக்கம்:அந்தித் தாமரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


“கூனிப்பொடிக் கொளம்பை இப்பத்தான் முதல் வாட்டியா உன் கையாலேவாங்கிச் சாப்பிடப்போறேன். ஆளு, எங்க மாங்குடி அத்தை பொண்ணு வேலாயி கிளமை தப்பாம எனக்குக் கூனிக் கொளம்பைத்தான் சமைச்சு ஊத்தும்!”

எண்ணத் தலைப்பட்டவன் சொல்லத் தலைப்பட் டான்; பேச்சு முடிந்தது; கொண்டவளை நோக்கினன்; அவளிடம் ஏதாவது மாறுதல் உண்டாகிவிடுமோ என்ற கவலை அப்பொழுதுதான் உண்டாயிற்று. தலையை நிமிர்த்தினன்; தலை குனிந்திருந்ததைக் கண்டான்.

‘வட்டிலேக் களுவு அஞ்சலைப் பொண்னே!’ என்று சொல்லிக்கொண்டே அண்டினன்; ‘அஞ்சலே, ஏன் உன் மூஞ்சி ஒரு மாதிரியாயிருக்குது?’ என்று வின விஞன். “எம் பேச்சு அவளுக்கு மனசுக்கு ஒப்பலையோ? - -

‘உங்களுக்குக் கூனிப் பொடி இம்மாந்துாரம் புடிக்கும்னு முன்னுடியே புரிஞ்சுக்காமப் போயிட்டேன். கோவிச்சுக்காதீங்க, மச்சான்! இனிமே வியாளச் சந்தைக் கெடுவிலே கூனி வாங்கியாந்து போடுறேன்!”

“பச்சையாவா, புள்ளே?: ‘இல்லே, செவப்பா!’ “ஏத்தப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடுற சோமுத் தேவர் மகளாச்சே? பேசக் கேக்கனுமா? உம் பேச்சை கான் மட்டுந்தான அனுபவிக்கிறேன்! ம்...நீ கொடுத்து வச்ச பொண்ணு!”

உங்க நிழலிலே ஒண்டி, உங்க கஞ்சியைக் குடிக் கிறத்துக்கு எனக்கு எளுதிப் போட்டிருக்கிற வரையிலே கான் கொடுத்து வச்சவதான்! அட்டியில்லே! ஆன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/124&oldid=1273113" இலிருந்து மீள்விக்கப்பட்டது