பக்கம்:அந்தித் தாமரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


வேலாயி தேடிப் போகாமலே கிடைத்த மூலிகை யாள்ை. ஆனல், குறித்த கெடுவுக்கு முன்னதாகவே அஞ்சலேக்கு வலி காணவே, அவள் வேலாயியைப் பற்றிப் பேச்சு மூச்சுக் காட்டவில்லை.

கட்ட நடுப்பகல்.

மாங்காய் வத்தல் குழம்பைச் சுண்ட வைத்து ஊற்றி, வாய்க்கு உணக்கையாக குடமிளகாயையும் வறுத்து தைத்தபோது, நாலு வாய் சோறு அதிக மாகவே அஞ்சலேயால் உண்ண முடிந்தது. வேலாயி யின் பொறுப்பு உணர்ச்சியைப்பற்றி அலசி ஆராய்ந்து பார்த்தாள் அவள். வேலாயியைக் குறித்து செய்யப் பட்ட முடிவு ஆட்டம் காண வேளை பார்த்திருந்த கட்டத்தில், பக்கத்துக் குடியிருப்புக்குள் முடங்கி யிருந்த கண்ணுத்தா வந்து சேர்ந்தாள்; “அஞ்சலை தங் கச்சி, ஒனக்குக் காதிலே இந்தச் சங்கதி படலையா? கீழத் தெருவு கோவிந்தன் பொஞ்சாதி பிரசவத்துலே செவலோகம் பூடிச்சில்லே! அப்பாலே இப்ப என்ன கடக்கப் போவுதாம், தெரியுமா? முக்திக் கட்டிக்கிட ணும்னு இருந்து முறிஞ்சுப் போன சம்பந்தம் புதுசாகி அந்தக் குட்டி அன்னக் கிளியைக் கொண்டுக்கிடப் போவுதாமே!...ம். கூரைமேலே சோத்தைத் தூவி வீசின, ஆயிரம் காக்கை ஒடிவரும்!” என்றாள்.

மசக்கைக்காரியின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் தத்தளித்தது. நிகழ்காலத்தில் எதிர்காலம் நிழலாடிற்று. o மலம் உற்பத்தி செய்த நீள்துயர் மூச்சுக்குக் கூடுதல். விழிகளில் பனி படர்ந்தது. காளி னகிக்கொண்டாள். தலைச்சன் ம்மன் சக்கிதியில் மாவிளக்குப் கொண்டது நினைவுக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/130&oldid=1273118" இலிருந்து மீள்விக்கப்பட்டது