பக்கம்:அந்தித் தாமரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


வேப்பிலக் கொத்து வாசல் நிலப்படியில் செருகப்பட்டது. -

தன்னுடைய அடையாளத்தைக் கண்டுகொண்ட களிப்பு அப்பொழுது சுப்பனுக்குக் கனவுலகைப் படைத்துக் காட்டியது. ஆனால், வேலாயி எங்கனே இருக்கு? கண்ணுப் பொறத்தாலே காணலியே’ என்ற சஞ்சலம் அவனை வதைத்தது. மம்மலுடன், மீண்டும் வேலாயியைத் தேடினன். காளியம்மன் சக்கிதியில் அவன் அவளைக் கண்டான்!

வேலாயி...அஞ்சல புளிக்குடிச்சிருச்சு; ஆம்பளை .ெ பா ற ந் தி ரு க் கு து!...ராத்திரி இருபது காளிப் பொளுதுக்கு வலி எடுத்துச்சு; உன்னே அளச்சேன். நீ எங்கே போயிட்டே?”

வேலாயியின் பூங்கரங்கள் அம்மனைத் தொழுதன. ஆத்தா, என் வேண்டுதலே கிறைஞ்சிடுச்சு!...இனிமே நான் எங்க அஞ்சலை அக்கா முஞ்சியிலே தைரியமா முளிப்பேன்!” என்றாள் அவள்.

சுப்பனுக்குக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. - - “மச்சான்! நீங்க மனச் சுத்தத்தோட என்கிட்ட சிரிச்சுப் பேசி பளகினதை தப்பாப் புரிஞ்சுகிட்டு என்னை ஒதுக்க ஆரம்பிச்சிது அஞ்சலை அக்கா!... கேத்திக்கு கண்ணுத்தா வந்து அது மனசைக் குட்டை குளப்பிடுச்சு. யாரோ ஒரு ஆம்பளே தன் சம்சாரம் பிரசவத்திலே செத்ததும், முதலிலே விட்டுப்போன மொறைப் பொண்ணையே - கட்டிக்கிட்டாராம்; அந்தக் கதையைக் கேட்டதும், அஞ்சலை அக்காவுக்கு இல்லாத தும் பொல்லாததும் தோணிச்சுப்போலே...அதுக்கு ஒத்தாப்பிலே, நீங்க ராவு எம்பேரைச் சொல்லி வேறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/132&oldid=1273120" இலிருந்து மீள்விக்கப்பட்டது