பக்கம்:அந்தித் தாமரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

கொண்டாந்து என் கையிலே கொடுத்தாக்கூட என்னாலே ஏதும் செய்ய ஏலாது. இனி, உன் மச்சான் கடன் பட்ட பணம் அவ்வளவுக்கும் உன் அண்ணன் தான் சொந்தக்காரர்; எனக்குச் சேர வேண்டிய பணத்தைச் சின்னையா எப்போது கொடுக்கிறாரோ அப்பத்தான் மூச்சுக்காட்டாமல் வாங்கிக்கிடணும், என்ன செய்யட்டும்?...பொன்னம்மா, இப்போதைக்கு உடனடியா நடக்கக்கூடியது எல்லாம் உன் தமையனார் கருணையிலேதான் ஒண்டி ஒளிஞ்சிருக்குது; அவர்கிட்டே போய்ச் சொல்லு; நான் றடுடளை பொழுது விடிஞ்சு தானல், கோட்டு கோர்ட்டுக்குப் போயிடும்!”

கண்ணுச்சாமி அம்பலம் புகைச்சல் இருமல் சுருள்களைப் புகைய விட்டபடி, விரித்த குடை நிழலில் அண்டி அடங்கித் திரும்பலானார்.

வீட்டின் வெளிப்புறத்து ஒட்டுத் திண்ணையின் மேற்கு விளிம்பை ஒட்டி செஞ்சுடர்ச் செல்வனின் ஒளி விழுந்திருந்தது.

‘மச்சான் எருக்கலக் கோட்டையிலேயிருந்து வேலை விட்டு வந்திடுவாங்களே!’ என்று எண்ணினாள் பொன்னம்மா. அடுத்த நாள் பொழுது நினைவுக்குள் விரிந்த போது, முள்மேல் இருப்பது போன்று உணர்ந்தாள்.

“இந்தப்பாரு பொன்னம்மா!... பணத்துக்கும் பாசத்துக்கும் ஏழாம் பொருத்தம் !...எனக்கு ஆபத்துச் சம்பத்துக்குக் கை கொடுக்காத உன் புருசனை நான் பழிக்குப் பழி வாங்கித்தான் தீருவேன். உனக்கு நாளை வர்ற குறைச்சல் என்னை ஒண்ணும் பாதிக்காது. இந்தாப் பார்த்தியா, உன் மச்சான் கையெழுத்துப் போட்டிருக்கிற நோட்டு. இது விடிஞ்சதும் பட்டுக்கோட்டைக் கச்சேரிக்குப் போயிடப் போவுது; நீ போ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/159&oldid=1315804" இலிருந்து மீள்விக்கப்பட்டது