பக்கம்:அந்தித் தாமரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

 "நில், அம்மா!" -மீண்டும் தடை உத்தரவு பிறந்தது.
 "ஏனம்மா கண் கலங்குகிறாய்? இந்தப் பன்னெண்டு வருஷமா நீ வடிச்ச கண்ணீருக்குக்கூட இரக்கம் காட்டாத இவருக்கு இப்போ நீ ஏம்மா அனுதாபம் காட்ட வேணும்? என் அப்பாவாம் அப்பா இதயமில் லாத இந்த அப்பா எனக்கு வேண்டவே வேண்டாம்! ... அம்மா, நீ எனக்காகப் பட்டபாடுக்கு நான் என் கடமையைக் கட்டாயம் செஞ்சிடுறேன்...அப்போ உடம்புக்கு முடியாம இருந்தப்போ, நீ சம்மதிக்க மாட் டாயேன்னுதான் நானே அடுத்த வீட்டுத் தாத்தாவைக் கூப்பிட்டு பாவைவிளக்கை ரகசியமா விற்றுவரச் சொன்னேன். இப்போ அது இருந்தா, அதையும் இவர் மூஞ்சியிலேயே வீசி எறிஞ்சிருப்பேன்...! உம். முதலில் அவரைப் போகச் சொல், அம்மா. இல்லேன்னா நான் இப்பவே வீட்டை விட்டுப் போயிடுறேன்...!”
 குழந்தை உள்ளம் பேசும் பேச்சுக்களா இவை?
 தண்டபாணி கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வில்லை. மெல்ல எழுந்தார். குழந்தையை அண்டினார்.
 "சூடா, நான் உன்கிட்டே சொன்னது பொய். பச்சைப் பொய். நான் உன் அப்பா இல்லை. நான் உன் அப்பாவுக்குத் தூரத்துச் சொந்தம். இவ்வளவு நாளும் வடக்கே இருந்தேன். உன் அப்பா செஞ்ச அந்நியாயத் தைத் தெரிஞ்சு, உன்னையும் உன் அம்மாவையும் பார்த்து விட்டுப் போகத்தான் இப்போ வந்தேன்...அவ் வளவுதான். நான் சொன்ன பொய்யையே நிஜம்னு நம்பி இவ்வளவு ஆத்திரப்பட்ட நீ, உன் அப்பாவை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/16&oldid=1387158" இலிருந்து மீள்விக்கப்பட்டது