பக்கம்:அந்தித் தாமரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:16

மனைவி'யாகக் காட்சியளிக்க முடியாது. உதய சூரிய னின் வரவுக்குக் காத்திருக்கும் அந்திக் கமலத்தின் நிலையில் இருக்கிறேன் நான். என் விதி அப்படி. என் விடிவு-நம் விடிவு, நம் குழந்தையின் மனமாற்றத்தில் இருக்கிறது. தெய்வமே, என் குழந்தையை எனக்குக் கொடு!...”

 சூடாமணியின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளி கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று சரம்வாரி யாக உதிர்ந்து கொண்டிருந்தன. 
‌ "பாவம், கலெக்டர் ஸார்!" என்று சொல்லியவாறு, "ஸார், ரொம்ப வலிக்குதுங்களா?” என்று கேட்டாள் சூடா
 "ஊஹூம், அதெல்லாம் ஒன்றும் இல்லை, சூடா" என்றார் தண்டபாணி. வார்த்தைகளில் ஒட்டிக்கொள் ளத் துடித்த வேதனைக்குமைச்சலை நெட்டித் தள்ளி விட்டு, புன்னகையை இழையோடச் செய்தார்.
 "நிஜமாவா?" என்று மறுபடியும் துருவித் துருவிக் கேட்டாள் குழந்தை. 
 “நிஜமாத்தான், மணி!” என்று சொல்லிச் சிரித்தார் அவர்.
 “ஆமாம், சூடா. வலி தோன்றாமலிருக்கத்தானே நான் இத்தனை நாழி மருந்து போட்டேன்" என்று டாக்டர் சுதர்சனம் வேறு ஆதாரம் காட்டிப் பேசினர். "அம்மா, நான் கலெக்டர் ஐயா மேலே மருந்துச் சீசாவை வீசினது என் தப்புத்தான். கோவிச்சுக்க மாட்டியே?" என்று தன் தாயிடம் அடுத்த கேள்வியைக் கேட்டாள் சூடாமணி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/18&oldid=1387161" இலிருந்து மீள்விக்கப்பட்டது