பக்கம்:அந்தித் தாமரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

ருக்மிணிக்குப் பேச நா எழவில்லை. வேதனை அழுகை வடிவெடுத்துத் தொண்டைக் குழிக்குள் வழி மறைத்து நின்றது.

மகள் தாயை அண்டினாள்.

“சீ, போ, போ...” என்று எட்டிப் பிடித்துத் தள்ளினாள் ருக்மிணி.

கண் பார்வை குறிப்புக் காட்டும் தொலைவில் சூடா போய் விழுந்தாள்.

கலெக்டர் தண்டபாணி ஒடோடிச் சென்று, சூடாவைத் தூக்கித் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டார். அவருடைய வலது கை சூடாவின் கன்னங்களைத் தடவிக் கொண்டிருந்தது. இடது கை நுணி விரலுக்கு சுரந்தோடி வந்த கண்ணீருக்குப் பதில் சொல்லப் பொழுது சரியாகயிருந்தது.

‘மணி, எனக்குத் துளிகூட வலி இல்லையே. பின், நீ ஏன் உன் மனசை வீணா அலட்டிக்கிறே? நான் தானே தப்புச் செஞ்சேன்-நீ இல்லையே?...உன் அம்மா உன்னைக் கோவிச்சுக்க மாட்டாள்...சரி, முகத்தைத் துடைச்சிட்டு, வேறே டிரஸ் பண்ணிக்கொள். நாம் ரெண்டு பேரும் நம்ப காரிலேயே சினிமாப் பார்க்கப் போவோம்” என்றார் தண்டபாணி.

“அது சரி, அம்மாவுக்கு என் மேல் ஆத்திரம் இல்லையானா, பின்னே ஏன் அழறாங்க?’’

“...இப்போ உன்னைப் பிடிச்சுத் தள்ளினதை நினைச்சு...”

“ஸார், நான் உங்ககிட்டே ஒரு சத்தியம் வாங்க வேணும்னு இருந்தேன். எங்க அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/19&oldid=1307862" இலிருந்து மீள்விக்கப்பட்டது