பக்கம்:அந்தித் தாமரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 "ஓ, தெரியுமே!"

 “அப்படியான ரொம்ப நல்லதாப் போச்சு. அவரை எங்கு கண்டாலும், எப்போக் கண்டாலும் கையோட என்கிட்டக்கொண்டு வந்து சேர்த்துப் பிடுங்க. நீங்க தான் கலெக்டர் ஸாராச்சே, உங்களுக்குத்தான் போலீஸ்காரங்க வேறே கையோடே எப்பவும் இருப் பாங்களாமே...? ஸார், சத்தியமா நீங்க இந்த உதவி யைச் செஞ்சுத்தான் ஆகணும். எங்க அம்மா இத்தனை காலமா வடிச்ச கண்ணீருக்கு அப்பத்தான் பலன் கிடைக்கும். அப்பாவாம்-அப்பா. வரட்டும்...!" என்று வீறுகொண்டு பேசினாள் சூடாமணி. மறுபடியும் எதையோ நினைவு கூர்ந்ததுபோல, “நிச்சயமாச் செய் வீங்களா?’ என்று கேட்டாள்.
 "சாமி பேரிலே ஆனையா உங்க அப்பாவை வெகு சீக்கிரம் உன் கையிலே ஒப்படைக்கிறேன், மணி.”
‌ "சபாஷ். கலெக்டர் ஸார்ன்னா கலெக்டர் ஸார்தான். என் அப்பாவுக்கு நான் பாடம் கற்பிச்சாத்தான் நான் சிரிப்பேன்; எங்க அம்மா சிரிக்கும்!”
 “சரி, சினிமாவுக்கு நேரமாயிடுச்சே? வேறே பாவாடை, சட்டை உடுத்திக்கிட்டு ஓடி வா."
 "காரிலேதானே நாம் போகனும்?’        
 “ஆமாம்.” "நான் திரும்பி எப்படி வருவேனாம்?” "நானே உன்னைக் காரிலே கொண்டுவந்து விடச் சொல்றேன் டிரைவர் கிட்டே.”
 “இப்பத்தான் ஞாபகம் வருது; உங்க வீடு எங்கே இருக்குது?"
 "மலைக் கோட்டையிலே,”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/20&oldid=1444329" இலிருந்து மீள்விக்கப்பட்டது