பக்கம்:அந்தித் தாமரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ருக்மிணி, நாம் செய்த தந்திரங்கள், நல்ல வேளை ?தந்திரங்களாகவே இருந்துவிட்டன. எப்படியோ சூடாவை நாடகத்துக்கு அனுப்பிவிட்டு, திட்டப்படி நீ என்னை அடைந்து விட்டாய், ஆஹா, பன்னிரண்டு வருஷங்கள் கழித்து எனக்கு என் ருக்மிணி கிடைத்தாள். இந்த என்னுடைய 'இரண்டாவது முதல் இரவை' எவ்விதம் நான் மறப்பேன்? ருக்மிணி, கண் கலங்காதே. சூடா எனக்குக் கிடைத்து விடுவாள். அந்தித்தாமரைக்கு உதய சூரியன் கருணை காட்டாமல் இருக்கவே மாட்டான்!

 நம் சூடா இந்தக் கடிதத்தைப் பார்த்துவிடப் போகிறாள் -முதலில் இதைத் தீயிட்டுவிடு.
               உன் பிரியமுள்ள அத்தான்,
               தண்டபாணி".

உலக உருண்டைக்குக் கண் இல்லை; இதயம் இல்லை .

ருக்மிணிக்குத் . . திடீரென்று வயிற்றைக் குமட்டியது. தலை சுற்றியது. மயங்கிக் கீழே சாய்ந்து விட்டாள். |
'ஸ்டெத்தஸ்கோப்' முறுவலித்தது. "கலெக்டர் ஸார், உங்கள் மனைவி உங்களுக்கு ஒரு தங்கப் பாப்பாவைப் பரிசு தரப் போகிறார்கள்!"

தண்டபாணிக்கு ஆனந்தம் தலை கால் புரிய வில்லை. "என் ருக்குவுக்கு வெட்கத்தைப் பார், வெட்கத்தை! என்று கேலி பண்ணினார், தம்பதிகள் ஊடல் வசப்பட்டனர். நாடிக்குழலுக் கும் பிறை நிலவுக்கும் அப்புறம் - அங்கு என்ன வேலையாம்? |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/28&oldid=1306118" இலிருந்து மீள்விக்கப்பட்டது