பக்கம்:அந்தித் தாமரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


பிராட்வே செல்லும் பஸ் ஒன்று வந்து கின்றது.

நாமதேவனல் ஒடிப்போய் ஏறமுடியவில்லை. ஆலுைம், ஒடிப்போய் ஏறவேண்டிய அவசரம் அவனை நியது. திரும்பிய அவசரத்தைத் கவனியா லோ, அல்லது வேண்டுமென்றாே ஒருவன் அவனை இடித்து மோதிக் கொண்டு கடந்து சென்றன். “மிஸ்டர் உஷார்!...பிக்பாக்கெட் ஜாக்கிரதை!...உங்க பாக்கெட் பிக்காக-பெரிசாக இருக்குது போலிருக்குது!’ என்று கவனப்படுத்திச் சிரித்தபடி திரும்பி வந்து கின்றன் அவன். காடகக் கம்பெனி நடிகனுக்கு நேரான கிராப்புத் தலையுடன், முகத்துக்கு லட்சனமாகவும் தோற்றினன் அவன். அவனுக்கு நன்றி கவின்று கொண் டிருக்கையில், பஸ் வரவே, முண்டியடித்துக் கொண்டு தொற்றிக் கொண்டான் காமதேவன்:

兹 盛 {

இi2ளப் பிடியைப் பற்றுதலுடன் பற்றிக் கொண்டவனுக டிக்கட் வாங்கினன் காமதேவன். அடைத்துக் கிடந்த மூச்சு முட்டும் நெருக்கத்தில் உழன்ற அவனுக்கு துளியாவது காற்று வராதா என்றி ருந்தது. பாய்க்கடை கிறுத்தத்தில் உட்கார ஓர் இடம் அவனுக்குக் கிடைத்தது. உட்காரப் போன தருணத்தில், காற்சட்டைப் பையைத் தடவினன் அவன். உயிர்த் துடிப்பை ஏமாற்றம் தடவியது. பர்ஸ் காணப்படவில்லை. கண்டக்டர் விசில் ஊதியபின், ‘திடுதிடுப்பென்று ஒருவன் இறங்கினன். அவனைத் தொடர்ந்து காமதேவனும் குதிக்க வேண்டியவன் ஆன்ை. குதித்த அவசரத்தில் செருப்பு வழுக்கி விட்டது. கால்சறுக்கி விழுந்த அவன், தட்டுத் தடுமாறி எழுந்து கடந்தான். இருபதடி தொலைவில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/34&oldid=1273057" இலிருந்து மீள்விக்கப்பட்டது