பக்கம்:அந்தித் தாமரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


அவனுக்கு முன்னுல் பஸ்ஸிலிருந்து அவசரமாகக் குதித்த நபர் கின்றன். மிருகங்கள் போட்ட சட்டை மட்டும் துல்லியமாக நினைவில் கின்றது. அந்த மனிதனை நிமிர்ந்து, அழுத்தம் பதித்துப்பார்த்தான், நாமதேவன். ‘பர்ஸ் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை செய்த அதே மனிதன்தான்! ஆம்; அதே ஆள் இப்போது கண்ணிரும் கம்பலையுமாக கின்று, எதையோ தேடிக் கொண்டே யிருந்தான். ‘சாகப் பிழைக்கக் கிடக்கும் என் பெண் சாதியோட வைத்தியத்துக்காக வச்சுக்கிட்டிருந்த ஐம்பது ருபாயை யாரோ ஜேப்படி செய்துப்பிட்டானே பாவிப்பயல்’ என்று செருமி அருதான் அவன்.

வேர்வை வழிந்தோடுவதைக்கூட துடைத்தெறியும் மன உணர்வு இழந்து, இழந்து விட்ட நூற்றியெழுபத் தைந்து ருபாய்ப் பணத்தின் சோதனையைப் பற்றிய துயரத்தில் வெந்து, கோய்ப் படுக்கையில் கிடக்கும் மனேயாட்டியின் வைத்தியம் இனிமேல் எவ்வாறு கடக் கும்என்ற கேள்விக்குறியில் மனம் உடைந்து கின்ற காம தேவனுக்கு அந்தப் புதுமனிதனின் வேதனை நெஞ்சை அடைத்தது. சற்றுமுன் ஒடிக் கொண்டிருந்த பஸ்ஸில் நிலைப் பிடியாக நின்று கொண்டே வந்தபோது, தன் கை கால்சட்டைப்பை வாயிலேயே அழுந்தியிருந்த உண்மையை எண்ணிப் பார்த்தான்; ஆசனம் காலியாகி உட்காரப் போன வேளையில்தான் யாரோ திருடி யிருக்க வேண்டுமென்பதை நிர்ணயித்த அவன் அதற்கு ஏற்றற் போல, கண்டக்டரின் ஊதுகுழல் ஒலி கேட்டபின் சடக்கென்று குதித்தான். அந்த நபரின் சட்டை அடையாளத்தை நினைவில் கொண்டு தான், தவறி விழுந்த வேதனையைக்கூட மதிக்காமல்’ அம்மனிதனை அண்டிச் சென்றன். ஆனால், அங்கே அவனது விம்மல் ஒலத்தைக் கேட்டதும், காமதேவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/35&oldid=1273058" இலிருந்து மீள்விக்கப்பட்டது