பக்கம்:அந்தித் தாமரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


கடன்!...... சாப்பிடுங்க; உள்ளே போயிட்டு வந்து, உங்களுக்கும் ஒரு வகை செய்யிறேன்!...” என்றன் காமதேவன்.

சபாரெத்தினத்தின் கறுக்கி விடப்பட்டிருந்த சன்னமான மீசை துடித்தது. “மெய்தானுங்க!”

豪 登 旁白

மனைவியைப் பார்த்துவிட்டு, உள்ளறைக்குச் சென்றான் காமதேவன். முதலில் டாக்டரை அழைத்து வந்து தன் மனைவியின் கிலேயைப் பரிசோதனை செய்யச் சொல்லி, பிறகு, சபாரெத் தினத்துடன் அவரை அனுப்ப வேண்டுமென்பது அவன் திட்டம். டிரெங்குப் பெட்டி யைத் திறந்தவன், பக்கத்துக் குடித்தனக்காரரின் அழைப்புக் குரல் கேட்டுச் சென்றன். முகப்பில் மாட்டியிருந்த கேடி'களின் படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தபோது, ஒரு முகத்தினையே ஆழமாகப் பார்க்கலானுன் காமதேவன். சபாரெத்தினத்தின் கண் களைப் போலவே அந்தப் படத்தில் இருந்த ஒரு ரெளடி” யின் கண்கள் இருந்தன. ஆனல் படத்தில் இருந்த வனின் மீசை பெரிது; தலைபரட்டை, சிறிய முடி!... வீட்டுக்காரரின் தம்பி போலீஸ் ஜவான். அந்தச் சமயத்தில் ட்யூட்டி முடிந்து வந்த அவரும் போலீஸ் உடுப்புடன் தோன்றினர்.

நாமதேவனுக்கு ஒருகணம் மனசை என்னவோ பண் ணியது. சபாரெத்'தினம் அசல் திருடனகவே,இருக்கட் டுமே! அதற்காக, சீக்கினல் அல்லற்படும் அவனுடைய பெண்சாதிக்கு வைத்திய வசதி செய்து கொடுக்காமல் இருக்கலாமா? அப்புறம், மனிதத்தன்மை என்ற ஒன்று ஒட்டி இருப்பதற்குப் பொருள்தான் ஏது?...எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/38&oldid=1273062" இலிருந்து மீள்விக்கப்பட்டது