பக்கம்:அந்தித் தாமரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


“செல்லி களு காணலே. உலகத்தோட சுயருபத்தை எம்மனசிலே கினைச்சுப் பார்த்தேன். என்னையும் மீறிப் பயம் வந்திருச்சு; அதான் என்னேயும் மீறி அப்படி அலறிப்பிட்டேன். உங்கிட்டே கொஞ்ச நேரம் முக்திக் கொடுத்த அந்தக் கடுதாசியையும், ஐயா வர்க” கொடுக்கச் சொன்ன சாவிக் கொத்தையும் தா. இன்னெரு சேதி. நீயும் எங்கூட இப்பவே புறப்பட்டாதி வேணும். அவர் வார பொழுதாகிடுச்சுது...’ என்றாள் பாமா, அழுத்தமான தொனியில்.

திரை விழுந்தது, மனச்சாட்சிக்கா?

உள்ளே நுழைந்தாள் பாமா.திரும்பினள். சர்வாலங் காரங்களுடன் திகழ்ந்தாள். தங்க நகைகள் கண்ணேம் பறித்தன. சேமித்து வைத்திருந்த சிறு வாட்டுப் பணம் மடியில் கனத்தது. பத்மினியை எடுத்துக் கொண்டாள்; ஆபரணங்கள் பொலிவூட்டின. மணி யையும் அழைத்துக் கொண்டாள். மோதிரங்கள் அழி கூட்டின. --

வேலைக்காரியும் பயணப்பட்டாள்.

வள்ளிநாயகத்துக்கு எழுதப்பட்ட கடிதக் கிழிசல்கள் மீது அடி பதித்து அடி பிரித்து நடந்தாள் பாமா. ‘இனியும் என்னை யாரும் ஏமாத்திப்பிட முடியாது; என்னையும் என் குழந்தைகளையும் நான் காப்பாத்திக் கிடுவேன் 1:

உள்ளத்திடை ஆர்ப்பரித்து முழக்கமிட்ட சகல உணர்வுகளையும் மீறிய விதத்திலே தாய்மை வெறியின் அட்டகாசச் சிரிப்பு எதிரொலித்தது.

祭 豪 器

எழுமூர் ரெயில் நிலையம். ‘அம்மா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/49&oldid=1273069" இலிருந்து மீள்விக்கப்பட்டது