பக்கம்:அந்தித் தாமரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


இருந்து உன் கல்யாணத்தைச் சீரும் சிறப்புமாக கடத்தி ஆனந்தக் கண்ணிர் சொரியப் பாக்கியம் செய்யவில்லை தான்; என்றாலும், உன் மணம் கண்டு மகிழவேனும் கொடுத்து வைத்தேனே, அதுவே என் அதிர்ஷ்டம் என் ஆசைக் கனவாகிலும் ஈடேறிப் பலிதமுற மனமிளகி ேைர, பகவான் ... அதுவே என்பாக்கியம்! இனி எனக் குக் கவலையே இல்லை, கண்ணே! விடை பெற்றுக்கொள் கிறேன்...கண்ணே, விடை பெற்றுக் கொள்கிறேன்...!

இப்படிக்கு, உன் தந்தை, பூரணலிங்கம்.’ கடிதத்தின் அடக்கம் கண்டு பார்வதி “அப்பா... அப்பா’ என்று அலறிஞள். டாக்டரின் கண்கள்

கலங்கின.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் கிகழ்ந்தது. எல்லோரும் திரும்பினர்கள், ஏதோ அரவம் கேட்டு: தோளில் சுமந்துவந்த உருவத்தைக் கிடத்தினுன்

ஒருவன். கனவு போலிருந்தது.

‘ஐயா, இவர் திடுதிப்பின்னு ஆத்திலே குதிச்சா ருங்க ...கல்ல வேளை காங்க பார்த்து இந்த ஆ2ளக் காப்பாத்தினுேமுங்க......கடைசியா இவர் பார்வதி அப்பாருன்னு சேதி தெரிஞ்சு, இங்கே துக்கி வந்தோம்...’ என்றான் அவன்.

டாக்டர் பாலகிருஷ்ணன் சில கிமிஷங்கள்வரை பூரணலிங்கத்துக்கு என்னவெல்லாமோ செய்தார். அவர் முகத்தில் திருப்தி படர்ந்து வந்தது. பூரண லிங்கம் கண்களை லேசாகத் திறந்தார்.

“அப்பா, இனிமேல்தான் அப்பா கான் அதிருஷ்ட சாலி என்பதை ஒப்புக்கொள்ளுவேன். ஆஹா உங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/57&oldid=1273074" இலிருந்து மீள்விக்கப்பட்டது