பக்கம்:அந்தித் தாமரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதயத்தின் இதயம்

குடும்பச் செலவு பட்ஜட்டைக் கணவனிடம் சமர்ப்பித்துவிட்டு, அழும் குழந்தையைக் கணவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள் ரஞ்சனி, பச்சைமண்; துவண்டு விழுந்தது. சென்ஸஸ் ஜாபிதாவிலே தானும் ஒரு நபராகி நாட்கள் என்ற ரீதியில்தான் அதற்குக் காலம் எழுதி வைத்திருந்த ஏடு சொல்லிற்று. அழும் குழந்தைக்குப் பால் ஊட்டினாள்; சீராட்டித் ‘தாலேலோ’ பாடினாள்.

நிலவின் போதைப் புன்னகையில், நீலாம்பரியின் அமுதப் பண்ணில் டாக்டர் குணசீலன் மனத்தை உடந்தைப்படுத்தி விட்டிருந்தான். பண்ணிசைக்கும் இன்பச் சூழ்நிலையும், பா இசைக்கும் பாவையின் கொள்ளை எழிலும், டாக்டரின் உள்ளத்தை உணர்ச்சி வயப்பட செய்தன.

நினைவு தொட்டுப் பழகியவள் ரஞ்சனி, டாக்டருக்கு. அவர் மனைவி. என்றாலும், கைபிடித்து மாதம் என்று ஒரு முப்பது நாட்கள் காலத்தின் வாயில் கபளீகரமாகிவிட்டன. பேறுகாலம்—பிரசவம்—தீட்டு—பின் புண்யா வசனம்—இப்படி அங்கங்கள் காட்சிமாறிக் கொடுத்தன. இவை காலண்டர் தாள்களின் கழிவுக்குக் காரணமாகவும் உதவின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/59&oldid=1305839" இலிருந்து மீள்விக்கப்பட்டது