பக்கம்:அந்தித் தாமரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


அதே சமயம்.

‘ட்ரிங்-ட்ரிங் என்று வாசல் மணி ஒலி வாசலிலி ருந்து எழுந்து ஒசையிட்டுக் கொண்டிருந்தது. ‘ஏதோ அவசரம் போலிருக்கிறது. யாரோ அழைத்துப் போக வந்திருக்க வேண்டும் என்று மனத்தில் எண்ணியவாறு எழுந்தார். கினைத்தது கடந்தது.

‘எசமான், எங்க ஐயா உங்களைக் கையோடே கூட்டிக்கிட்டு வரச் சொன்னுரு. அவங்க பெண் சாதிக்குப் பிரசவ வேதனேங்க. ரொம்பக் கஷ்டமின்னு: பேசிக்கினங்க. பாவம், ஜயந்தி அம்மா புழுவாத் துடிக்கிறங்க...’

வேலைக்காரன் கூறிய வார்த்தைகள், பிரசவ. வேதனைப்பட்டுக் கிடக்கும் ஜயந்தியைப் பற்றியும் அவள் கணவனைப் பற்றியும் கினைவுமாலை சேர்க்கத் துண்டின. டாக்டர் குணசீலனின் இதயம் எரிமலை யானது. அவர் இதயம் தனக்குள் அலறியது.

“ஜயந்தி-ஜயந்தி வஞ்சகி. கம்பிக்கைத் துரோகம் செய்தவள்-அவளுக்கு உதவிக்கு கான் வேண்டுமாம். அவள் கணவன் சேகர் அழைக்கிருளும்-கான் போகவா-இந்த ஜன்மத்திலா-?

கினேவுமாலே கடந்த காலத்தின் விளிம்பில் கனவு மாலையாகிக் கிடந்தது.

குணசீலனின் சொந்த அத்தை பெண் ஜயக்தி” இரண்டு குடும்பங்களும் ஒன்றாகப் பிணைந்திருந்த காலம் அதிகம். இளம் உள்ளங்கள் இணைசேரக் கேட்க வேண்டியதில்லை. குணசீலனுக்கு ஜயந்தி என்றால் உயிர். அவள் அவனது பொழுது போக்கு. ஜயந்தி அழகுக் குவியல். அதுமட்டுமல்ல, அவள் கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/64&oldid=1273078" இலிருந்து மீள்விக்கப்பட்டது