பக்கம்:அந்தித் தாமரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


அவனுக்கு அறிவு போதித்தன; போதையும் போதமும் தந்தன. அவளின் சூழ்நிலையில் அவன் தன்னை மறந்த லயங்தன்னில் இருந்தான்; கிடந்தான். ஜயந்தியும் அப்படித்தான்! அவனை அடிக்கொருதரம் 'அத்தான், அத்தான்' என்று அலட்டிக் கொண்டு ஏகவசனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருப்பாள் அவள். அவன் இதயத்தையே பிளந்து உள்ளே சுரங்கம் வைக்கப்பட்டிருக்கும் அவனது அந்தரங்கத்தை அறிந்துவிடத் துடிப்பவள் போல அப்படிப் பார்ப்பாள் குணசீலனை. அந்தப் பார்வையில் என்ன வசியமிருக்குமோ, அவன் சொக்கிப் போவான். இருமனமும் ஒருமனமாக அப்படிப் பின்னிப் பிணைந்திருந்தன.

காலம் மாறியது.

குணசீலனை 'நீ' என்று அழைப்பதை விடுத்து ‘நீங்கள்' என்று கூப்பிடும் நிலைக்கு ஜயந்திக்குப் பாடம் சொல்லித் தந்திருந்தது பருவமும் வயதும்.

இருவரது திருமணம் பற்றியும் இரு தரப்புப் பெற்றோர்களும் பேச்சைப் பரிமாறிக் கொண்டார்கள். பெற்றவர்களிடையே நிலவிய பேச்சின் துணையில் குணசீலன், ஜயந்தியுடன் கடத்தப்போகும் எதிர் காலத்து இன்ப வாழ்க்கை குறித்துப் பலபல கனவுக் கோட்டைகள் நிர்மாணித்து வந்தான். தான் அரசிளங் குமாரனாகவும், அவள் அரசிளங் குமாரியாகவும் நீராழி மண்டபத்தில் நின்று மாலைமாற்றிக் கொள்வது போலெல்லாம் கனவு கண்டான்; அந்தக் கனவு கடைசியில் கனவின் கதிக்குள்ளாகச் செய்யப்பட்டது.

ஜயந்தி மூலம் இதற்கு!

“நான் அத்தானை மணக்க முடியாது’ என்று ஜயந்தி முடிவில் தன் தாயிடம் கூறிவிட்ட முடிவுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/65&oldid=1305149" இலிருந்து மீள்விக்கப்பட்டது