பக்கம்:அந்தித் தாமரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

செய்ததா? என் நினைவின் விளைவுதான் உன் குழந்தையைச் சாகடித்ததா?... ஐயோ!” என்று டாக்டர் குணசீலனின் இதயம் பலவாறு புலம்பியது; கண்ணீர் வெள்ளம் புரண்டது; பெருமூச்சுகள் குமுறிப் புரண்டன.

மோட்டார் சைகிள் பறந்தது.

முழு அமைதி பூத்திருந்த அவ்வீட்டில் குணசீலன் அடியெடுத்து வைத்ததும், அவர் கைகளில் ஒரு சிறுமி கடிதம் ஒன்றைத் திணித்துவிட்டுச் சென்றாள்.

அத்தான்,

இக்கடிதம் உங்கள் கையில் கிடைக்குமுன் நான் எந்நிலையில் இருப்பேனோ அறியேன். இது உங்கள் கைக்குக் கிட்டியபின், எந்நிலையையும் அறியேன். ‘இதோ அதோ’ என்று என் உயிர்-என் இதயம் தாங்கி நிற்கும் உயிர் துடிக்கின்றது. அதற்குள் என் இதயத்தை உங்களிடம் வெளியிடவே இக்கடிதம் எழுதுகிறேன்.

அன்றைய நாளில், நாம் இருவரும் ஜோடியாய்ப் பேசிச் சிரிக்கத்தான் சந்தர்ப்பங்கள் அனுசரணை புரிந்தன. நான்கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால் என் இதயம் ஏனோ உங்களை என் காதலராகக் காட்ட மறுத்தது; ஏற்க மறுத்தது. பிள்ளைப் பிராயந் தொட்டு ஒன்றுபோலப் பழகிய தோஷமோ என்னவோ, என் நெஞ்சம் உங்களை என் உடன் பிறந்தவராகவே மதித்தது; மதிப்புக் கொடுத்தது. ஒரு கால், என் கூடப்பிறந்த தமையன் இல்லாத குறையால் விளைந்த விபரீத முடிவோ,என்னவோ? நான் உங்களைக் காணும் சமயமெல்லாம் ‘அண்ணா’ என்று வாய்நிறையக் கூவியழைத்துப் பேசத்தான் துடித்தேன். விசித்திரமாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/68&oldid=1305819" இலிருந்து மீள்விக்கப்பட்டது