பக்கம்:அந்தித் தாமரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

4

“அப்பச்சி!’ ‘தம்பியா?

“மருந்து சாப்பிடுங்க. பத்தியம் வெச்சு தெய்வானே கொண்டாருவாள்:”

ஆற்றமையுடன் கிழவர் தலையை உலுக்கினர். அனல் காற்றை மின் இயக்க விசிறி உண்டது.

“அப்பா, உங்களுக்கு ஆயுசு கெட்டி. கேத்து ராத் திரிகூட உங்க நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செஞ்சிருக் கேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, அப்பா!’

காகப்பச் செட்டியார் கை தொழுதார். அவர் உதிர்த்த கண்ணிர் மணிகள், அருகில் கிடந்த திரு. மணப் படத்தில் உதிர்ந்தன. சாவித்திரி! உங்கூட கானும் வந்திடத்தான் போறேன்!

பொற்புடையம்மன் கோயிலில் இரவுப் பூஜை கடைபெற்றுக் கொண்டிருந்தது.

நித்தம் கித்தம் மாற்றம் ஏந்திக் காட்டும் உஷ்ண மானிக்கு நிகராக, செட்டியாரின் கைகாடியும் அவரது தேக நிலையும் நாளுக்கு நாள் மாறுபட்டுக்கொண்டே வந்தன. சமையற்காரன் காசியும், காவற்காரன் கந்தப் பனும் செட்டியாரின் உடலுக்குக் காவல் இருந்தனர். டாக்டரின் மருந்துக் கலவை தினுசுகள் அவரது உயி ருக்குக் காவல் இருந்தன. குழந்தைகளும் குட்டிகளும் அவரின் உள்ளத்திற்குக் காவல் இருந்தன. -

எல்லாம் இருந்தென்ன? -

செட்டியாரைப் பயம் அண்டி விட்டது. வெளிச்சம் அந்தப் பயத்தைப் பெரிது படுத்திக்காட்டியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/76&oldid=620115" இலிருந்து மீள்விக்கப்பட்டது