பக்கம்:அந்தித் தாமரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயம்! மரணபயம்!...

ஒருசமயம். அப்போது அவருக்கு வயது இருபத் திரண்டு. தேவகோட்டையில் சுப. ராம. அண்.ை மலைச் செட்டியார் வீடு பசையுடையது. அங்கேயே சம் பக்தம் சாடிக்கை, கொள்ளவேண்டுமென்று நாகப்ப னின் பெற்றேர்கள் விழைந்தார்கள். ஏட்டுக்குறிப்புக் களும் வீட்டுப் பேச்சுக்களும் நல்ல பலன் சொல்லின. காரைக்குடியில் மாப்பிள்ளை வீட்டின் குலதெய்வத்துக் குப் பூசனை நிகழ்த்தப்பட்டது. மண வினைக்கு காள்’ குறித்தார்கள். இருந்தாற்போல, அவருக்கு சீக்கு” வந்துவிட்டது. உற்றமும் சுற்றமும் பயந்தன. ஆல்ை அவர் மட்டிலும் பயப்படவேயில்லை. பயம் வயதுக்கு வயது மாறுபடுமோ?

பட்டணத்திலிருந்து முதல் மகள் வள்ளியம்மை வந்திருந்தாள். மாப்பிள்ளைக்கு பாங்கில் ஏஜெண்ட் உத்தியோகம். பவழக்காரத் தெரு ககரத்தார் விடுதி யில் செய்யச் சொல்லிக் கொணர்ந்திருந்த அல்வா டப் பாவை எடுத்து, ஒர் உருண்டை உருட்டிக் கையில் எடுத்துக்கொண்டு, ‘அப்பா!’ என்று கூப்பிட்டாள்.

காகப்பச் செட்டியார் ஏறிட்டு கோக்கினர்; அரு மைத் திருமகளை இமை முடாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார். என் பெண் சாதி சாவித்திரியை அப்படியே உரிச்சு வச்சிருக்குது! மனைவியின் அன்புப் பணி விடைகளை ஏற்றுக்கழித்த இன்பமிகு நாட்களின் கன வுப்பொழுதுகள் ஒன்றல்ல, இரண்டல்லவே? அவள் பாக்கியவதி சஷ்டியப்தபூர்த்தி விழாவை பொருள் பொதிந்ததாக ஆக்கிய பெருமையுடன் போய்’ விட்டாள்-பூவும் மஞ்சளும் துலங்க !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/77&oldid=620116" இலிருந்து மீள்விக்கப்பட்டது