பக்கம்:அந்தித் தாமரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


விழிவரம்பில் சரம் தொடுத்த முத்துக் கண்ணிரை ஒற்றியெடுத்தபின், அவர் வள்ளியம்மையைப் பார்த் தார். அவள் நீட்டிய அல்வாத் துணுக்கைத் துண்டு படுத்தியபின் வாயில் போட்டார். இனிப்பின் சுவை காக்குத் தொங்கலில் இருந்தது. இன்பம் அணைந்த தம் வாழ்வுக் கதையின் ருசிமிகுந்த அத்தியாயத் தலைப்புக் களே கினேவிற்குள் கொண்டுவர முயன்றர். அறுபத் தொன்பது ஆண்டுகள் என்றால், சாமானியமா?

சென்ற வருஷம் சித்திரைத் தொடக்கத்தில் தம் மைக்தன் சுந்தரத்தின் குழந்தைக்கு புதுமை விழா கடத்தப்பட்டது. ருபாய் ஐயாயிரம் காலி. ‘கான் இருந்து கடத்தி வைக்கிற கடைசித்தேள்வை, விசேஷம் இதுண்ணு என்னமோ எனக்குத் தோணுது, தம்பி. ஆனபடியினலே, ரொம்பவும் சிறப்பாவே விசேஷத்தை கடத்திடவேனும், என்று எச்சரித்தார். உள் மனத் தின் வெளிப்படையான எச்சரிக்கையின் குரல் இப் போது செட்டியாரின் மனக்காதுகளில் பயங்கரமாக ஒலித்தது, முனை மழுங்கிய கிராமபோன் ஊசியில் இயங்கப் பெறும் இசைத்தட்டினைப் போல!

‘அண்ணனைக் கூப்பிடு!”

‘ஆகட்டுமுங்க!” -

சுந்தரம் வந்தான். பி. காம் படித்த பிள்ளை. காதில் பென்சில் வைத்திருந்தான். திறந்த பேனவும் கையு மாக வந்தான். ‘அப்பச்சி!’’ -

‘தம்பி, இப்படி உட்காரேன். நம்ம லேவாதேவித் தொழிலை நீ கெட்டிக்காரத்தனமாக கவனிச்சுக்கிட ணும். எனக்குப் பின்னடி கீதான் இந்தவீட்டுப் பரம் பரைப் பேரைக் காப்பாத்த வேண்டியவன்; காப்பாத் தக் கடமைப்பட்டவன். இந்தக் காரைக்குடி முச்சூடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/78&oldid=1273088" இலிருந்து மீள்விக்கப்பட்டது