பக்கம்:அந்தித் தாமரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


அந்தி சந்தி.

காகப்பச் செட்டியார் சுய கினேவை ஆட்கொண்ட வர் போல் காணப்பட்டார். கல்லதனமாக”ப் பேசினர்; உரையாடினர். சுற்றிச் சூழ இருந்த பொருள்களைப் பார்த்தார். ஒர் ஆப்பிளை எடுத்தார். தூக்கக்கூடத் தெம்பில்லை. காசி கறுக்கி ஒரு துண்டை நீட்டினன். வாயில் போட்டார். மென்று தின்ன பற்களுக்கு எங்கே போவார்? பாவம் இன்னொரு பொட்டணம் காட்சி தந்தது. மூக்குக் கண்ணுடிக்கு கேர்வசமாகக் கொண்டு போய், அந்தப் பொட்டலத்தில் சுற்றப்பட் டிருக்த கடுதாசியைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பிறகு, அதைப் பிரித்து எடுத்தார். அவரைச்சுற்றிலும் பரப்பி வைக்கப்பட்டிருந்த சாமான்களின் இடையி, லிருந்து ஏதோ ஒரு தாள் பறந்து சென்றது.

அதில் கண்ட வாசகம் :

‘உம் வாழ்வோ கொஞ்ச நாள்தான். ஆல்ை உமது ஆசைகளோ வானே முட்டு கின்றன. உமக்கு ஏற்பட்டுள்ள மரணபயம் உமக்குச் சுய கலத்தையும் வலுவாக உண் டாக்கியிருக்கின்றது. ஆகவேதான், நீர் இப்படித் தாறுமாறய்ப் பணத்தைச் செல. வழிக்கப் பார்க்கிறீர். காளை நீர் பிடி சாம்ப லாகப் போகிற புள்ளி. ஆனால் உம் வாரிசு களோ இன்னும் நெடுங்காலம் வாழப் போகிற வர்கள்; வாழவேண்டியவர்கள்! அவர்களுக் காக மிஞ்சியுள்ள பணம் கியாயப்படி அவர் களுக்கே உடைமையாகவேணும். இந்த மனித தருமத்தை மறவாதீர் நீர்!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/83&oldid=1273090" இலிருந்து மீள்விக்கப்பட்டது