பக்கம்:அந்தித் தாமரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


காகப்பச் செட்டியாரின் கண்களின் முன்னே அந்தப் பெரிய மனே ஆலவட்டம் சுற்றியது. மீண்டும் பித்தம் தலைக்கேறின. பாவனையில் சிரிப்பைக் கக்கி ஞர். மருந்துச் சீசாக்களைத் தள்ளிவிட்டார். பழங்களை எடுத்து வீசினர். படுக்கைக்கு அருகில் சுவரில் தொங் கிக் கொண்டிருந்த கண்ணுடியில் தெரிந்த அவரது முகம் அவரையே அச்சுறுத்தியிருக்க வேண்டும். இல்லை யென்றல், அதையும் சுக்கு நூறக ஏன் உடைக்க வேண்டும்?

சுந்தரம் கதி கலங்கினன். முன் பகுதியில் காத் திருந்த டாக்டர்களிடம் ஒடின்ை. அப்போது அங்கே ஒர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது:

“ஆமாம், மிஸ்டர்குருராஜ்’...நீங்கள் செய்ததுதான் சரி. இந்தக் கிழம் தம் ஆயுசுக்குள்ளாகவே தாம் சம் பாதித்த பணம் அவ்வளவையும் தீர்த்து விடத் துடிக் கிறது. இது பித்த வெறி மட்டுமல்ல! தான் சாகப் போகிருேம் என்ற தீர்வு காண முடியாத கவலை'யில் எழுந்த துர் எண்ணமுங்கூட!...மனிதன் சாவை காடும் போது, அவனிடமிருந்து பாசம், பந்தம், அன்பு, இரக் கம், தியாகம் போன்ற இத்தகைய மனித உணர்வுகூட ஒதுங்கி விடுமென்று நாம் படிக்க வில்லையா?. கிழவ ரின் பார்வையில், நீங்கள் எழுதிச் சுற்றிவைத்த அந்தத் ‘தத்துவ போதனை வரிகள் இங்கேரம் சிக்கியிருக்கத் தான் வேண்டும்!...பாவம்’

இருவகைச் சிரிப்பையும் எதிர்த்துச் சாடுபவனை யொப்ப சுந்தரம் அவர்களின் எதிரில் கின்றன். தாரை தாரையாகக் கண்ணிர் மல்கினன். மேனி கடுங்கியது; இதயம் நடுங்கியது: “மிஸ்டர் குருராஜ்! நீர் டாக்டரா? நீர் மனே தத்துவ டாக்டராக நடித்ததைவிட, நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/84&oldid=1273092" இலிருந்து மீள்விக்கப்பட்டது