பக்கம்:அந்தித் தாமரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


எல்லை தாண்டி கின்றது போலப்பட்டது அவளுக்கு. ஆனால், மகளின் முகத்தில் தன் தவறுணர்ந்த தன்மை கோடு கோடாகப் பரவி நின்றதைத் தரிசித்தாள் தாய்.

‘ஆகட்டும், அம்மா’ என்று மொத்தத்தில் சொல்லி விட்டு ககரப்போனுள் களினு. தாய் வசமிருந்த அந்தப் புத்தகத்தைக் கண்ட அவளுக்குத் திரும்பவும் திகைப்பு வளர்ந்தது. அவள் கால்கள் பின்னிக் கொண்டன.

களினவின் குறிப்பை அறிந்தாள் கல்யாணி.

‘களின, இக்தா உன் புத்தகம்’ என்று கூறிப் புத்த கத்தை நீட்டினுள். களினு வெடுக்கென்று புத்தகமும் கையுமாக மறைக் துவிட்டாள். கல்யாணிக்கு அந்தப் புத்தகம் தன் பார்வையை விட்டு விலகினதும் ஏனுே கண்ணிர் மண்டியது.

கல்யாணியின் கண்முன் அந்தப் புத்தகம் சுழன்றது. அதில் கண்ட அன்புள்ள கல்யாணிக்கு அன்பளிப்பு-நாகராஜன் என்ற அந்த வரிகள் சுழன் றன. அவள் சுழன்றுள் !

‘அந்த நாளில் என் அத்தான் நாகராஜன் எனக்கு அன்பளிப்புச் செய்த இந்தப் புத்தகத்தை கான்தான் அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டேனே இன்றைக்கு மீண்டும் இந்த இருபது வருஷங்கழித்து என் பார்வை யில் பட்ட இப்புத்தகம் களினவிடம் எப்படி வந்தது?... ஒன்று பலவாறு அவள் தன்னுள் எண்ணிப் புழுங்கினுள். அவளுக்குக் கண்களில் கண்ணிர் முட்டிக் கொண்டு வந்தது. காலம், இடைவெளிவிட்டுப் பரவியிருந்த கழிந்த நாட்களை கோக்கிச் சிறகடித்துப் பறந்தது அவளது மனப்புள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/89&oldid=1273095" இலிருந்து மீள்விக்கப்பட்டது