பக்கம்:அந்தித் தாமரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

டேன். உடனே பட்டணத்துக்குப் புறப்பட்டுச் சென்று.சேகரனை இட்டுவந்தேன். சற்று பின்தங்கியிருந்தால் கூட, நான் என் மகனைக் கண்டிருக்க முடியாது. உன் நல்ல முடிவைக் கேட்டதும்தான் அவனுக்குக் களை தட்டியது முகத்தில். விதி நம்மைப் பிரித்தது. ஆனால் நம் குழந்தைகள் விஷயத்தில் அனுசரணை புரிந்துள்ளது நம் பாக்கியமே! சேகரன்-நளினா ஜாதகங்கள் பெட்டியும் பேழையுமாக மணியாகப் பொருந்தியுள்ளன....” என்று நிறுத்தினான் நாகராஜன், ஆனந்தம் குரலில் வரிசை செலுத்த.

“அத்தான், நீங்கள்தான் நம் குழந்தைகளின் கல்யாணத்தைச் சிறக்க நடத்தி வைக்கவேண்டும்...” என்றாள் கல்யாணி, ஆனந்தக் குரலில் அன்பு வெள்ளம் பொங்கிக் கொப்புளிக்க.

அப்பொழுதுதான் ஒருவரையொருவர் புதிதாகப் பார்த்துக் கொள்ளுவதைப் போல சேகரனும் நளினாவும் புன்னகையும் புது நிலவும் பொங்கப் பார்த்துக் கொண்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/99&oldid=1305814" இலிருந்து மீள்விக்கப்பட்டது