உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"பொல்லாத சொப்பனம் கண்டு பயந்திட்டேனுங்க, அத்தான்!” என்று பயத்தோடு அழுதவளாக, அத்தானின் மாண்புமிக்க மார்பில் தலையைச் சாய்த்துக் கொண்டாள் ரஞ்சனி, ஆருயிர் மைந்தனின் அணைப்பில், அவளைச் சுட்டுக் கொண்டேயிருந்த கண்ணீர், இப்போது தான் சிறுகச் சிறுகக் குளிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

அதோ:

ரதி!

மன்மதனின் ரதி அல்லள்!

மகேஷின் ரதி!

உரியவளுக்கு விடுதலை அளிக்கிறார் உடையவர்,

யார் இவன்?...

பாபுவுக்கு எரிச்சல் எரிச்கலாக வந்தது; அதே எரிச்சல், பண்புடன், மகேஷையும் எரிச்சலோடு பார்த்தான்; பார்வையிட்டான்.

ரஞ்சித் பணத்தில் புழங்குபவர்:ஆகவே, வரவு-செலவு. லாப-நஷ்டம் எல்லாம் தெரிந்தவர். ஆனால், அன்புக்குக் காட்டுப் படும்போது, அந்த அன்பெனும் மகுடிக்குக் கட்டுண்ட நல்ல பாம்பாகவே ஆகிவிடும் மகத்தான மனிதத் தன்மை பெற்ற ஓர் ஆபூர்வப் பிறப்பை எடுப்பதும் வழக்கம்- "மகேஷ்!" என்று கூப்பிட்டார். மலர்ச்சியுடன்!

மகேஷ், குற்றவாளிக் கூண்டில் நீதிபதியின் சந்நிதானத்தில் நிறுத்தப்பட்ட கைதியாக நின்றவர், தாழ்ந்து குனிந்திருத்த தலையை மெள்ளமெள்ள நிமிர்த்திப் பார்க்கலானார்.

"மகேஷ், உங்க ரதி நிற்கிற இந்த லோகத்துக்கு நீங்க இப்போது திரும்பியிருப்பீங்கண்ணு நம்புறேன்; கிணற்றுத் தண்ணீரை எந்த வெள்ளமும் எப்போதும் கொண்டு போயிட முடியாதுங்க! பாபுவை நீங்க எப்போது

98