பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணுமானலும் பார்க்கலாம்; பாபுவோடே பேசலாம்!... ஊம்: மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டு வாங்க, சாப்பிடுவோம்.’’ என்று மகேஷை நோக்கிச் சொல்லிய பெருந்தனக்காரர் ரஞ்சித் இப்போது இல்லத்தரசியின் பக்கம் திரும்பி, "ரஞ், இப்பவே நேரம் ரொம்ப ஆச்சு: சீக்கிரம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணு; நாம் எல்லாருமே ஒரே பந்தியாய்ச் சாப்பிடப் போறோம்; உள்ளே நடுக் கூடத்திலேயே ரத்தினக் கம்பளத்தை விரிச்சிடு; ஏ. ஸி.யையும் போட்டுடனும் பாவம், நம்ம மகேஷ் பேயடிச்ச மாதிரி இருக்கார்; சூட்டுக்கு ஏ. ஸி. ஒத்தடம் கொடுக்கட்டுமே!” என்றார்,

மகேஷ் சிரிக்க முயல்கிறார்:

பாபுவுக்கு அடியும் புரிய வில்லை: நுனியும் விளங்க வில்லை.

பாபுவைப் பிரியம் கனியப் பார்த்தாள் ரதி.

பாபுவே முகம், சுளிக்கிறான்!

நந்தினிப் பெண் மேலே, அதாவது, மாடியில் குளியல் கழிந்துக் கொண்டிருக்கிறாள் போலும்!

'சூ, மந்திரக்காளி!' போட்டு வரவழைக்கப்பட்ட ‘மென்னகையை வெளிக்காட்டியவாறு, அங்கிருந்து நகர்கிறாள் ரஞ்சனி!

ரஞ்சித் தமக்கே உரித்தான பெருந்தன்மை கனியத் தமக்குத் தாமே சிரித்துக் கொண்டார்!. .

பிற்பகல்:

மணி இரண்டு; நிமிஷம் ஏழு.

நடுக்கூடம்.

99